விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இதுபற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. தற்போது இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி விவோ நிறுவனம் தனது விவோ T3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர்களில் புதிய விவோ T3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் புதிய விவோ T3 லைட் மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ T3 லைட் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ரியல்மி C65 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ N65 போன்ற ஸ்மார்ட்போன்களில் இதே பிராசஸர் உள்ளது.
புகைப்படங்களை எடுக்க விவோ T3 லைட் மாடலில் 50MP சோனி ஏ.ஐ. கேமரா மற்றும் இரண்டாவது லென்ஸ் ஒன்றும் 12MP செல்பி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…