Connect with us

tech news

நல்ல பிராசஸர், பாஸ்ட் சார்ஜிங்.. மிரட்டும் விவோ ஸ்மார்ட்போன் – எந்த மாடல்?

Published

on

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய T சீரிஸ் ஸ்மார்ட்போன்- விவோ T3 ப்ரோ 5ஜி மாடலை அறிமுகம் செய்தது. இதில் 6.77 இன்ச் 120Hz 3D Curved AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, சூப்பர் நைட் மோட், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டுள்ள விவோ T3 ப்ரோ 5ஜி மாடல் அதிகபட்சம் 8GB ரேம், 256GB மெமரி கொண்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ T3 ப்ரோ 5ஜி மாடல் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போன்ற கனெக்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் புதிய விவோ T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 26,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

அறிமுக சலுகையாக விவோ T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 தள்ளுபடி மற்றும் ரூ. 3000 எக்சேஞ்ச் போனஸ் பெறலாம். இத்துடன் ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

google news