Categories: tech news

பொசுக்குனு போன் விலையை குறைத்த விவோ

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது விவோ V30 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது. அந்நிறுவனம் இந்தியாவில் தனது V40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விலை குறைப்பின் படி விவோ V30 ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 31,999 என்றும் 8GB + 256GB மெமரி மாடல் விலை ரூ. 33,999 என்றும் 12GB + 256GB மெமரி மாடல் ரூ. 35,999 என்றும் மாறி இருக்கிறது. இது அவற்றின் முந்தைய விலையை விட ரூ. 2000 குறைவு ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் விவோ வி ஷீல்டு பாதுகாப்பு திட்டம் போன்ற கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன.

இத்துடன் 8GB + 128GB மெமரி மாடலுக்கு அதிகபட்சம் எட்டு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. புதிய விலை விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களிலும் மாற்றப்பட்டு விட்டது.

அம்சங்களை பொருத்தவரை விவோ V30 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 2800×1260 பிக்சல் Full HD AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 720 GPU, அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட விவோ ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP போர்டிரெயிட் கேமரா மற்றும் 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் விவோ V30 ஸ்மார்ட்போன் 80W சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

Web Desk

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

12 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

12 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

13 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

21 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

21 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

22 hours ago