Categories: tech news

பெரும் எதிர்பார்ப்பு.. 2 புது Vivo போன்கள் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. விவோ V40 சீரிசில் இவை இடம்பெற்றுள்ளன. விவோ V40 மற்றும் V40 ப்ரோ என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன்கள் 6.78 இன்ச் FHD+ 120Hz Curved AMOLED டிஸ்ப்ளே, 50MP செல்பி கேமரா கொண்டிருக்கின்றன.

இரு மாடல்களில் விவோ V40 ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V40 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200+ பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP UW மற்றும் 50MP 2x டெலிபோட்டோ போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய V40 சீரிஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக விவோ தெரிவித்துள்ளது.

விவோ V40 மாடல் டைட்டானியம் கிரே, லோட்டஸ் பர்ப்பில் மற்றும் கேஞ்சஸ் புளூ நிற ஆப்ஷன்கள் மற்றும் கிலாஸ் பேக் கொண்டிருக்கிறது. விவோ V40 ப்ரோ மாடல் டைட்டானியம் கிரே மற்றும் கேஞ்சஸ் புளூ நிற ஆப்ஷன்களில் மட்டும் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 5500mAh பேட்டரி, 80W சார்ஜிங், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலையை பொருத்தவரை விவோ V40 மாடலின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும் டாப் எண்ட் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 36,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவோ V40 ப்ரோ மாடலின் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 49,999 என்றும் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 55,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், இவற்றின் விற்பனை முறையே ஆகஸ்ட் 19 மற்றும் ஆகஸ்ட் 13 ஆம் தேதிகளில் துவங்க உள்ளது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago