Categories: tech news

என்ட்ரி லெவலில் புது போன் அறிமுகம் செய்த விவோ – எந்த மாடல்?

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை சத்தமின்றி அறிமுகம் செய்தது. விவோ Y18i என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஆகும்.

முன்னதாக விவோ Y18 மற்றும் Y18e ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது விவோ Y18i மாடல் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் விவோ Y சீரிசில்  அறிமுகமான மூன்றாவது ஸ்மார்ட்போன் இது ஆகும்.

புதிய விவோ Y18i ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 1612×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன், யுனிசாக் T612 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, 4GB வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஓஎஸ் கொண்டிருக்கிறது.

போட்டோக்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 0.08MP லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15W சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் IP54 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4ஜி LTE, வைபை, ப்ளூடூத், GPS, யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய விவோ Y18i ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விரைவில் ஆன்லை் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

42 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago