Categories: tech news

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 5000mAh பேட்டரி.. ₹7K விலையில் புது போன் – எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விவோ Y18i பெயரில் அழைக்கப்படுகிறது. பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புது விவோ ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரையில் விவோ Y18i மாடலில் 6.56 இன்ச் HD+ 720×1612 பிக்சல் ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 12 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் யுனிசாக் டி612 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 64GB மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 0.08MP லென்ஸ் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அக்செல்லோமீட்டர், பிராக்சிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் கொண்டிருக்கிறது.

புதிய விவோ Y18i ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. அளவீடுகளில் இந்த ஸ்மார்ட்போன் 163.63 x 75.58 x 8.39 mm ஆகவும், எடையை பொருத்தவரை 185 கிராம் ஆகவும் உள்ளது.

இந்திய சந்தையில் புதிய விவோ Y18i ஸ்மார்ட்போன் ஜெம் கிரீன் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,999 ஆகும். விற்பனை விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், ப்ளிப்கார்ட், மற்றும் க்ரோமா போன்ற சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago