Connect with us

latest news

மிட் ரேஞ்சில் மிரட்டி விட்ட விவோ.. வேற லெவல் போன் அறிமுகம்

Published

on

விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன்- விவோ Y19s பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆக்டா கோர் யூனிசாக் பிராசஸர் கொண்ட புது விவோ ஸ்மார்ட்போன் 8GB ரேம், 128GB மெமரி கொண்டிருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.68 இன்ச் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 0.08MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா, பன்ச் போல் கட்-அவுட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட் உள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பிராசஸர் 12 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2, ஜிபஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்சார்களை பொருத்தவரை அக்செல்லோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், பிராக்சிமிட்டி சென்சார் மற்றும் விர்ச்சுவல் கைரோஸ்கோப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய விவோ ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15W சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை.

google news