Connect with us

tech news

விவோ 5ஜி போன் விலை இவ்வளவு தானா? உடனே வாங்கிடலாம் போலயே..!

Published

on

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. விவோ Y28 சீரிசில் இடம்பெற்று இருக்கும் புது ஸ்மாரட்போன்கள் விவோ Y58 5ஜி மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கிறது. இந்த மாடல்களில் 6.56 இன்ச் HD+ LCD 90Hz ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ 5ஜி சிப்செட் மற்றும் அதிகபட்சமாக 8GB வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ Y28e மாடலில் மட்டும் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய விவோ Y28s மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இரு மாடல்களிலும் IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3.5mm ஆடியோ ஜாக், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000mAh பேட்டரி, 15W சார்ஜிங் உள்ளது.

விவோ Y28e ஸ்மார்ட்போன் வின்டேஜ் ரெட் மற்றும் பிரீஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விவோ Y28s மாடல் வின்டேஜ் ரெட் மற்றும் டுவின்க்லிங் பர்ப்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும், 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

google news

latest news

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

Published

on

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும். தற்போது இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சுமார் 800 ரூபாயில் துவங்குகிறது.

தொடர்ச்சியாக கியாஸ் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருவதால், ஏழை எளியோரால் கியாஸ் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மேலும், பலர் கியாஸ் விலை உயர்வு காரணமாக மின்சார அடுப்பு, இதர மாற்று எரிசக்தியை சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில், ரூ. 500-க்கும் குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? நாட்டில் மெல்ல பயன்பாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் புதிய வகை சிலிண்டர் ரூ. 500-க்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிலிண்டர்கள் ‘கம்போசிட் சிலிண்டர்” என அழைக்கப்படுகிறது. சாதாரண சமையல் கியாஸ் சிலிண்டர் எடை 14.2 கிலோ எடை கொண்டிருக்கும் நிலையில், கம்போசிட் சிலிண்டர்களின் எடை 10 கிலோவாக இருக்கும். குறைந்த விலை காரணமாக இதன் எடை குறைவாக இருக்கிறது. மேலும், இந்த சிலிண்டர்கள் மிக பாதுகாப்பாக உருவாக்கப்படுகின்றன.

மேலும், இதன் வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை காரணமாக இவற்றை எளிதில் தூக்க முடியும். இந்த சிலிண்டரில் கியாஸ் எவ்வளவு மீதம் இருக்கிறது. எப்போது கியாஸ் தீர்ந்து போகும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். கியாஸ் சிலிண்டர் தீர்ந்து போனாலும், இவற்றை உடனே பெற்றுக் கொள்ள முடியும்.

google news
Continue Reading

latest news

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

Published

on

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்தது தான். இந்த விஷயத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், இந்தியாவில் ரூ. 10,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் ரூ. 10,000 நோட்டுக்கள் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. 1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன் முதலில் ரூ. 10,000 நோட்டை புழக்கத்திற்கு விட்டது. அன்றைய காலக்கட்டத்தில் புழக்கத்தில் விடப்பட்ட மிகப்பெரிய ரூபாய் நோட்டாக அது இருந்தது.

ரூ. 10,000 நோட்டு வியாபாரிகள் மற்றும் வர்த்தகம் செய்வோர் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த நோட்டுக்களை ஏழை எளியோர் பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு ஆகும். இந்த நோட்டுக்களை பெரிய அளவில் வியாபாரம் செய்து வந்த சிலர் மத்தியிலேயே புழக்கத்தில் இருந்தது.

எனினும், 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரிடிஷ் அரசாங்கம் ரூ. 10,000 நோட்டுக்களை மதிப்பிழக்க செய்து உத்தரவிட்டது. அன்றைய காலக்கட்டத்தில் கருப்பு பணம் அதிகளவில் புழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கையை அன்றைய பிரிடிஷ் அரசு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு 1954 ஆம் ஆண்டு ரூ. 10,000 நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இத்துடன் ரூ. 5000 நோட்டும் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், 1978 ஆம் ஆண்டு இந்திய அரசு ரூ. 10,000 மற்றும் ரூ. 5000 நோட்டுக்களை மீண்டும் மதிப்பிழக்க செய்தது.

google news
Continue Reading

latest news

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

Published

on

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு வழங்குகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ. 2000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுக்க அதிகபட்சம் 2 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி இருப்பதையும், ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருப்பதை கீழே கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ள முடியும்..

பிஎம் கிசான் வலைதளம் செல்ல வேண்டும்.

வலைப்பக்கத்தில் பயன்பெறுவோர் பட்டியலை (Beneficiary List) இயக்கலாம்.

இனி மாநிலம், மாவட்டம், மற்றும் முகவரியை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இறுதியில் அறிக்கையை வழங்கக் கோரும் (Get Report) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் உங்களது பெயர் இடம்பெற்று இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வெளிப்படைத்தன்மையை வழங்கும் நோக்கில் பயனாளிகள் பட்டியல் பஞ்சாயத்து அலவலகங்களிலும் ஒட்டப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 ஆவது தவணை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரூ. 2000 பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்திய பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றதும் பிரதமர் மோடி இந்த தவணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

latest news

வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்

Published

on

ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற பேச்சு எப்போதோ காலம்கடந்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலதுறைகளில் சாதனை படைத்து, கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், மத்திய அரசு துவங்கி, செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்று உத்யோகினி. இந்த திட்டம் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ரூ. 3,00,000 வரையிலான கடன் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகைக்கு பெண்கள் வட்டி ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், கடன் தொகையை அதிகபட்சம் 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியானவர்கள் யார் யார்?

  • உத்யோகினி திட்டத்தில் பயன்பெறுபவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
  • கடன் பெறும் பெண்ணின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 1,50,000 மற்றும் அதைவிட குறைவாக இருக்க வேண்டும். விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் விலக்கு உள்ளது.
  • கடன் பெறும் பெண்ணின் வயது 18 முதல் 55 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • உத்யோகினி திட்டத்தில் கடன் பெறுவோர் அதற்கு முன் நிதி நிறுவன கடன் பாக்கி வைத்திருத்தல், கடன் செலுத்த தவறி இருத்தல் கூடாது.

உத்யோகினி திட்டத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்கள் அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் துணை இயக்குநர் / CDPO அலுவலகங்கள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து அருகாமையில் உள்ள வங்கியில் சமர்பிக்க வேண்டும். இனி விண்ணப்பம், ஆவணங்கள் சரியாக இருப்பின் குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் வழங்கும் நடைமுறை துவங்கப்படும்.

கடன் கோரும் பெண் சமர்பிக்கும் விண்ணப்பப்படிவம் மற்றும் உரிய ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை வங்கி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். ஒருவேளை அனைத்தும் சரியாக இருப்பின், கடன் வழங்க நிதி ஒதுக்குமாறு வங்கி சார்பில் கார்ப்பரேஷனுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் தொகை விடுவிக்கப்படும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கிற்கே நேரடியாக கடன் தொகை செலுத்தப்பட்டு விடும். இதை கொண்டு விண்ணப்பதாரர் வியாபாரத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

google news
Continue Reading

latest news

இது தெரியாம போயிடுச்சே.. தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு பெற இதை செய்தாலே போதுமா?

Published

on

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டம் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் நிலையில், ஸ்மார்ட் கார்டு பெறும் வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. முன்பு ஸ்மார்ட் கார்டு பெற விரும்புவோர் அதற்காக அரசு அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

ஆனால், தற்போது இந்த நிலை மாறி பயனர்கள் ஆன்லைன் மூலமாகவே ஸ்மார்ட் கார்டு பெற விண்ணிப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் இணைய வசதி இருக்கும் எந்த இடத்தில் இருந்து கொண்டும் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.

இவ்வாறு விண்ணப்பிக்கும் முன் உங்களிடம்- ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, பான் அட்டை, புகைப்படம், வருமான சான்று, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்டவை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் தமிழக அரசின் TNPDS வலைதளம் செல்ல வேண்டும்.

இனி ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் (Smart Card application) என கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வலைப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில், தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

விவரங்களை பூர்த்தி செய்ததும், தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இனி குடும்ப உறுப்பினர்கள் விவரம், கியாஸ் இணைப்பு விவரங்களை பதிவிட வேண்டும்.

அடுத்ததாக விண்ணப்பத்தை சமர்பிக்கக் (Submit) கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பின், உங்களது விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதை கூறும் விண்ணப்ப எண் உருவக்கப்படும்.

பயனர்கள் இந்த விண்ணப்ப எண் பயன்படுத்தி தங்களது ஸ்மார்ட் கார்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டால், அதற்கான தகவல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வடிவில் வழங்கப்படும்.

google news
Continue Reading

Trending