விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது Y58 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக குறைத்து இருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பின் படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளி்ப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வலைதளங்களில் புதிய விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆன்லைன் போன்றே ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய விலை விவரங்கள்:
விவோ Y58 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை தற்போது ரூ. 18,499 என மாறியுள்ளது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 1000 குறைவு ஆகும். ஆன்லைன் தளங்களில் விலை குறைப்பு தவிர இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ Y58 5ஜி மாடலில் 6.72 இன்ச் 2408×1080 Full HD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், அட்ரினோ 613 GPU, 8GB ரேம், 128GB மெமரி, மெமரியை 1TB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ Y58 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 44W சார்ஜிங் வசதி உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…