Connect with us

latest news

சுமார் 20 லட்சம் பயனர்கள் மாயம் – தொடர் துயரத்தில் வோடபோன் ஐடியா!

Published

on

Vodafone Idea

மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ச்சியாக பயனர்களை இழந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலான தகவல்களின் படி வோடபோன் ஐடியா பயனர்களில் 20 லட்சத்து 1 ஆயிரத்து 388 பேர் சேவையில் இருந்து விலகியுள்ளனர். இதன் மூலம் தொடர்ச்சியாக 23 ஆவது மாதமும் வோடபோன் ஐடியா பயனர்கள் எண்ணிக்கை சரிந்து இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஜனவரி மாதம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 02 ஆக இருந்து வந்தது. பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 11 லட்சத்து 41 ஆயிரத்து 96 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 0.09 சதவீதம் குறைவு ஆகும். இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 20.84 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை வயர்லெஸ் சந்தாதாரர்களை மட்டுமே குறிக்கும்.

Trai

சந்தையில் வோடபோன் ஐடியா ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 87.55 சதவீதமாக இருக்கிறது. டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 99.25 சதவீத புள்ளிகளோடு முதலிடம் பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வோடபோன் ஐடியா ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 0.79 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

வோடபோன் ஐடியா பயனர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது. ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு 28 கோடியே 19 லட்சத்து 02 ஆயிரத்து 927 என்று இருந்த பயனர்கள் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் 23 கோடியே 79 லட்சத்து 62 ஆயிரத்து 722 ஆக சரிவடைந்துள்ளது. இதன் மூலம் வோடபோன் ஐடியா தொடர்ச்சியாக தனது பயனர்களை இழந்து வருவது அம்பலமாகி இருக்கிறது.

Trai

பீகார், மகாராஷ்டிரா, கோவா, உத்திர பிரதேசம் கிழக்கு, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வோடபோன் ஐடியா பயனர்கள் அதிகளவில் வெளியேறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைவதோடு, ஊரக பகுதிகளிலும் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி பிப்ரவரி 2023 வரையிலான நிலவரப்படி மொத்தமாக ஊரக சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11 கோடியே 61 லட்சத்து 99 ஆயிரத்து 84 ஆக உள்ளது.

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் சந்தையில் 5ஜி வெளியீட்டில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எனினும், வோடபோன் ஐடியா நிறுவனம் இதுபற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதன் காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மேலும் சிக்கலான சூழலில் தவித்து வருகிறது.

இது போன்று தொடர்ச்சியாக வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதன் மூலம் கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக வோடபோன் ஐடியா நிறுவன பயனர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

மளமளவென சரிந்த 6 மாடி கட்டிடம்… பலர் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்…!

Published

on

குஜராத்தில் ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

குஜராத் மாநிலம் சூரத் நகரின் சச்சின் பாலி என்ற கிராமத்தில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த கட்டிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

மேலும் அந்த கட்டிடத்தில் வசிக்கும் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறும்படி சூரத் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுக்குள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கிய இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

இடிப்பாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த கட்டிடம் கட்டப்பட்ட ஆறு ஆண்டுகளில் சிதைவடைந்து விட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Continue Reading

latest news

காலால் மிதிச்சு தயாரிக்கும் ஒயின்… இது இவ்வளவு காஸ்டிலியா…? விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

Published

on

மிகப்பெரிய மாடல் கால்களால் மிதித்து தயாரிக்கப்படும் ஒயின் விலை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

உலகம் எங்கும் மது பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பானமாக இருப்பது ஒயின். மது அருந்துபவர்கள் ஒயின் சுவைக்காக எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒயின் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இங்கிலாந்தை சேர்ந்தவர் எமிலி ரேஸ்.

30 வயதான இவர் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால் செய்யப்பட்ட ஒயினை பலரும் விரும்பி சாப்பிடுவதாக கூறியிருக்கின்றார். எமிலி கால் மாடலாக புகழ்பெற்றவர், இவர் தனது வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதிலிருந்து ஒயினை தயாரிக்கின்றார். மேலும் அதனை ஒரு ஒயின் பிராண்டாக ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்று பெயரிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் அவர் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகம் செய்தார். தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால் தயாரிக்கப்படும் அந்த ஒயின் பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் என்று தெரிவித்துள்ளார். அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் 10,662 ரூபாய் ஆகும். ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் சிறிய பகுதி உள்ளது. அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்து இருக்கின்றார்.

Continue Reading

latest news

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழ வேண்டாம்… அண்ணாமலை அனுதாபம் எங்களுக்கு தேவையில்லை… ஆர்பி உதயகுமார் பதிலடி…

Published

on

அதிமுக கட்சிக்கு அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் எப்போதும் தேவைப்படாது என்று ஆர்பி உதயகுமார் கூறி இருக்கின்றார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் அண்ணாமலை பேசியதற்கு பதில் அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாகரீகம் இல்லாத அரசியல் பண்பாட்டை விதைத்து வருகிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை. அதிமுகவை பற்றி எங்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகின்றது. அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழத் தேவையில்லை. அண்ணாமலை போன்றவரின் அனுதாபம் அதிமுகவுக்கு எப்போதும் தேவை கிடையாது.

பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பணத்தை வாரி இறைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் 2014, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கை விட வாரணாசியில் பிரதமர் மோடி குறைவான வாக்குகளை இந்த முறை பெற்றிருக்கின்றார். அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத அரைவேற்காடுத்தனமான பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி மூலமாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என்று அண்ணாமலை பேசியிருப்பதை வாபஸ் பெற வேண்டும். இனி அதிமுக தொண்டர்களை சீண்டி பார்க்க வேண்டாம். அவர் தன் கட்சியை மட்டும் வளர்த்தால் போதும். அதிமுகவை பற்றி எந்த கவலையும் அவருக்கு வேண்டாம். மீறி ஏதாவது பேசினால் அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன நடக்கும் என்று அண்ணாமலை தெரிந்து கொள்வார்” என பேசி இருந்தார்.

Continue Reading

india

பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாள் விஐபி தரிசனம் ரத்து.. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்..!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். பல்வேறு நாட்டில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கட்டுக்கடங்காத அளவிற்கு பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

கூட்டமாக இருந்தாலும், வெயில் மழை என எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருக்கிறார்கள். அதிலும் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கின்றது.

பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பதியில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கின்றது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வருகிற 9-ம் தேதி மற்றும் 16ஆம் தேதி களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகின்றது.

மேலும் ஆனி வாரம் ஆஸ்தானம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒன்பதாம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் 12 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 5 மணி நேரம் இடைவெளியில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

Continue Reading

latest news

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு… ஆனால் அங்க இல்லையாம்…

Published

on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரின் அலுவலகத்தில் புதைக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்றிலிருந்து இந்த சம்பவத்தால் பல இடங்களில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரண நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ள தகவில் வெளியாகி இருக்கின்றது.

பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி இடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் உடல் கல்டி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்து இருக்கின்றது.

Continue Reading

Trending

Exit mobile version