வோடபோன் ஐடியா நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை அறிவித்து இருக்கிறது. 30 நாட்கள், 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிரீபெயிட் ரீசார்ஜ்களை அறிமுகம் செய்ய டிராய் வலியுறுத்தி வந்தது.
இதன் அடிப்படையில், வோடபோன் ஐடியா நிறுவனம் 60 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் விலை ரூ. 625 ஆகும்.
பலன்களை பொருத்தவரை வோடபோன் ஐடியா ரூ. 625 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் காலிங், 50GB வரையிலான டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.
இவைதவிர இந்த சலுகையில் ஓடிடி மற்றும் வி ஹீரோ அன்லிமிட்டெட் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையின் ஒற்றை பலனாக அதிகளவு டேட்டாவை குறிப்பிடலாம்.
சமீபத்திய பிரீபெயிட் ரீசார்ஜ்களில் தினசரி டேட்டா மற்றும் அதற்குரிய கட்டுப்பாடுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த சலுகை எவ்வித கட்டுப்பாடும் இன்றி பயனர்களுக்கு 50GB டேட்டா வழங்குகிறது.
சலுகையின் வேலிடிட்டி முடியும் வரை இந்த டேட்டாவை பயனர்கள் விருப்பம்போல் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளளாம். கணக்கிடும் போது, இந்த சலுகை பயனர்களுக்கு தினமும் 1GB அளவு டேட்டா கூட வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், டேட்டா பயன்பாடுகள் தவிர்த்து, நீண்ட கால கனெக்டிவிட்டி மற்றும் வாய்ஸ் கால் பலன்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த ரீசார்ஜ் நல்ல தேர்வாகவே இருக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…