இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் மொபைல் கட்டணங்களை தொடர்ச்சியாக உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கட்டண உயர்வு வெளியிட்ட நிலையில் வோடவோன் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்து இருக்கிறது.
பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 10 சதவீதம் முதல் 23 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 4ந் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 28 நாளுக்கு தினம் 1.5 ஜிபி, அன்லிமிடிட்டெட் கால் கொடுக்கும் 299 ரூபாய் பேக்குகள் 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருடாந்திர கட்டணம் 2899 ரூபாயில் இருந்து 3449 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. மேலும் ஆட் அன் டேட்டா பேக்குகள் 1 ஜிபி 19 ரூபாயில் இருந்து 22க்கு உயர்த்தி இருக்கிறது. 3 நாளைக்கு 6 ஜிபி வழங்கி வந்த 39 ரூபாய் கட்டணம் 48க்கு உயர்ந்து இருக்கிறது.
ஏற்கனவே பெரிய தொகைகளில் இருக்கும் மொபைல் கட்டணங்கள் மீண்டும் உயர்ந்து இருக்கிறது. ஜியோவை தொடர்ந்து முக்கிய டெலிகாம் உயர்த்தி இருக்கும் இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. 5ஜி கட்டமைப்புக்கான முதலீடுகளே இந்த உயர்வுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…