Connect with us

tech news

வயநாடு நிலச்சரிவு: ஏர்டெல் வரிசையில் இலவச டேட்டா வழங்கும் Vi

Published

on

vodafone

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பயனர்களுக்கு உதவும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி பெய்த கனமழையால் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பலர் மண்ணுக்கு அடியில் புதையுண்டனர். பலர் காணாமல் போயினர். நிலச்சரிவில் சிக்கி வீடுகள் இடிந்து விழுந்தன.

மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதன் காரணமாக மீட்பு பணிகள் பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 290-ஐ கடந்துவிட்டது. மேலும் 200-க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு துணை நிற்கும் வகையில் வோடபோன் ஐடியா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பயனர்கள் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு தினமும் 1GB இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்க முடியும். இந்த கூடுதல் டேட்டா தானாகவே சேர்க்கப்பட்டு விடும்.

போஸ்ட்பெயிட் பயனர்கள் தங்களது கட்டணத்தை பத்து நாட்கள் கடந்தும் கட்ட முடியும். இதுதவிர கேரளா மாநிலத்தில் உள்ள வோடபோன் ஐடியா ஸ்டோர்கள் அனைத்தையும் கலெக்ஷன் பாயிண்ட்களாக மாற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நினைப்போர் தங்களுக்கு அருகாமையில் உள்ள வி ஸ்டோர்களுக்கு சென்று அவற்றை வழங்கலாம். இங்கிருந்து நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

google news