Connect with us

tech news

வாட்ஸ்அப்-லயே டயலர் அம்சம், இனி அந்த தொல்லை இல்லை..

Published

on

வாட்ஸ்அப் தளத்தில் இன்-ஆப் டயலர் எனும் அம்சம் உருவாக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் தகவல் வெளியானது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப்-இல் அழைப்புகளை இதுவரை இல்லாத அளவுக்கு மிக எளிமையாக மேற்கொள்ள முடியும்.

உலகம் முழுக்க பெரும்பாலானோர் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். மெசேஞ்ச் மற்றும் கால் என அவரவர் விரும்பிய படி வாட்ஸ்அப் மூலம் உலக உறவுகளுடன் மிக எளிமையாக தொடர்பு கொண்டு வருகின்றனர். எனினும், இவ்வாறு தொடர்பு கொள்ள பயனர்கள் குறிப்பிட்ட நபரின் காண்டாக்ட்-ஐ தங்களது மொபைலில் சேமித்து வைத்திருப்பது அவசியம்.

ஆனால், புதிதாக வழங்கப்படும் அம்சம், இந்த அவசியத்தை போக்குகிறது. இது குறித்து வாட்ஸ்அப்-இன் புதிய அம்சங்கள் குறித்த விவரங்களை வழங்கி வரும் WaBetaInfo தற்போது வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சில பயனர்களுக்கு புதிதாக மிதக்கும் வகையிலான பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.13.17 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.

இந்த அப்டேட் வாட்ஸ்அப்-இல் இன்-ஆப் டயலர் வசதியை வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் கால்ஸ் டேப்-இல் உள்ள புதிய மிதக்கும் வகையிலான பட்டனை க்ளிக் செய்து அழைப்புகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அழைப்புகளை மேற்கொள்ள பயனர்கள் தங்களது சாதனத்தில் ஏற்கனவே காண்டாக்ட்-ஐ ஸ்டோர் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது இந்த அம்சம் செயலியின் பீட்டா வெர்ஷில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. விரைவில், இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் அப்டேட்-இல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

google news