மெட்டா நிருவனத்தின் ஒரு செயலியான வாட்ஸ் ஆப் அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. இந்த செயலியை உபயோகிக்கும் மக்களின் பாதுகாப்பிர்காக பல்வேறு வசதிகளை உருவாக்கிய வண்ணம் உள்ளன. இனி வாட்ஸ் ஆப்பில் வேறு எவராலும் நமது மொபைல் எண்ணை காண இயலாது. அதாவது நமது மொபைலில் நாம் ஒருவரின் எண்ணை சேமிக்காமல் இருந்தால் அவரால் நமது மொபைல் எண்ணை காண இயலாது. இந்த வசதியானது லேட்டஸ்ட் வெர்ஷன் உள்ள வாட்ஸ் ஆப் செயலியில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த வசதிக்கு ‘Phone Number Privacy’என்று அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் எந்த ஒரு குழுவில் உள்ள நமக்கு தெரியாத நபரும் நமது எண்ணை பார்க்க இயலாது. ஒரு வேளை நாம் அவரின் செய்திகளுக்கு ரியாக்ட் செய்தாலும் கூட நமது எண்ணை அந்த தெரியாதா நபரால் பார்க்க இயலாது. இது இந்த வசதியின் தனி சிறப்பு.
ஆனால் இந்த வசதியில் நாம் கம்யூனிட்டியின் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நமது எண்ணை மற்றவர்கள் பார்க்க இயலாது. ஒருவேளை நாம் கம்யூனிட்டியின் தலைவராக இருக்கும்பட்சத்தில் நமது எண்ணானது அனைவருக்கு தெரியும். இந்த வசதியானது நமக்கு ஒரு சிறந்த பிரவசி அம்சத்தை கொடுக்கிறது.
ஒரு வேளை நாம் நமது Contact-ல் இல்லாத நபருக்கு கம்யூனிட்டியின் மூலம் தகவல்களை அனுப்ப விரும்பினால் அந்த நபரின் மொபைலுக்கு நாம் கோரிக்கைகளை அனுப்ப முடியும். மேலும் அவர் அனுமதி கொடுத்தால் அவரின் எண்ணை நாம் கண்டுகொள்ளலாம். இந்த வசதியானது தற்போது beta testers சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இது அனைத்து ஆப் ஸ்டோர்களிலும் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…