tech news
புது அப்டேட் வழங்கும் வாட்ஸ்அப்- என்ன ஸ்பெஷல்?
வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி புது அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை செயலியில் புது வசதிகளை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி செயலியில் ஏற்படும் பிழைகளும் சரி செய்யப்படுகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப் செயிலியில் புது வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக அந்நிறுவனம் அப்டேட் வெளியிட்டு வருகிறது. புது வெர்ஷனுக்கு பயனர்கள் அப்டேட் செய்யும் பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக Favourites எனும் பிரிவு இருப்பதை காணலாம். இதை கொண்டு பயனர் அடிக்கடி உரையாடும் நபரின் காண்டாக்ட் திரையின் மேல்புறம் தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரிவு வாட்ஸ்அப் சாட் மற்றும் கால்ஸ் என இரண்டிலும் இடம்பெற்று இருக்கும்.
புதிய வசதி குறித்து வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், பயனர்கள் தங்களின் சாட்களை ஒழுங்கே வைத்துக் கொள்ள புது வசதி உதவும் என்று தெரிவித்துள்ளது. சாட்களில் All, Unread மற்றும் Groups ஆகிய ஆப்ஷன்களின் இடையில் Favourites ஐகான் இடம்பெற்று இருக்கிறது. இதே வசதியை கால்ஸ் ஆப்ஷனிலும் பயன்படுத்திக் கொள்ளாம்.
காண்டாக்ட்களை Favourites-இல் சேர்ப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்..
- வாட்ஸ்அப் செயலியில் சாட்ஸ் ஆப்ஷனில் உள்ள Favourites ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இனி நீங்கள் Favourites பகுதியில் வைக்க விரும்பும் காண்டாக்ட், க்ரூப்களை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு வாட்ஸ்அப் கால்ஸ் ஆப்ஷனில் உள்ள Add Favourites ஆப்ஷனை கிளிக் செய்து காண்டாக்ட்களை தேர்வு செய்ய வேண்டும்.
- Favourites ஆப்ஷனில் காண்டாக்ட்களை நிர்வகிக்க Settings > Favourites > Add to Favourites ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இதில் தேர்வு செய்த காண்டாக்ட்களை நிர்வகித்தல், ஆர்டரை மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
தற்போது இந்த வசதியை வழங்குவதற்கான அப்டேட் வெளியிடப்பட்டு விட்டது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது.