latest news
புது பிரைவசி அம்சங்கள், நேவிகேஷன் பார் – விரைவில் வெளியாகும் அசத்தலான வாட்ஸ்அப் அப்டேட்!
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அறிமுகம் இல்லாதவர்களின் அழைப்புகளை சைலன்ஸ் செய்வது, கீழ்புற நேவிகேஷன் பார் கொண்ட புதிய யுஐ, ஒற்றை வாக்கு கொண்ட போல்ஸ் மற்றும் சில அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. இவற்றில் சில அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டிங் செய்வோருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
சில அம்சங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் திரையின் கீழ்புறம் நேவிகேஷன் பார் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற வசதி வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் நேவிகேஷன் பார் வழங்கப்பட இருக்கிறது. நேவிகேஷன் பாரில் உள்ள ஐகான்களை க்ளிக் செய்து வாட்ஸ்அப் ஆப்ஷன்களை பயனர்கள் எளிதில் இயக்க முடியும்.
இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமில்லாதவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளை சைலன்ஸ் செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது. இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.10.7 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அறிமுகமில்லா அழைப்புகளை சைலன்ஸ் செய்ய முடியும். இந்த அம்சத்தை இயக்க வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) — பிரைவசி (Privacy) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். பின் ஸ்பேம் (Spam) என்று கருதும் எண்களை சைலண்ட் மோடில் வைத்துக் கொள்ளளாம். எனினும், இந்த அழைப்புகள் கால் லாக் (Call Log) மற்றும் நோட்டிஃபிகேஷன் (Notification) பிரிவுகளில் காணப்படும்.
இவைதவிர வாட்ஸ்அப் செயலியில் கருத்து கணிப்புகளை (Polls) உருவாக்கும் வசதி, ஃபில்டர் மூலம் கருத்து கணிப்புகளை சாட்களில் தேடும் வசதி, கருத்து கணிப்பில் பயனர்கள் வாக்களிக்கும் போது நோட்டிஃபிகேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. கருத்து கணிப்பு அம்சம் கொண்டு பயனர்கள் மக்களிடம் விரைந்து தகவல்களை பெற்று எளிதில் முடிவுகளை எடுக்க முடியும் என்று மெட்டா நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சிங்கில் வோட் போல்ஸ் (Single Vote Polls) எனும் பெயரில் வழங்கப்பட இருக்கும் கருத்து கணிப்புகளில் பயனர் ஒருமுறை வாக்களித்தால் அதனை மீண்டும் மாற்ற முடியாது. கருத்து கணிப்பு முடிவுகளை ஃபில்டர் கொண்டு தேடும் போது புகைப்படம் மற்றும் வீடியோ வடிவில் அவற்றை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் இதனை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைத்துவிடும்.