Connect with us

tech news

இனி அதை பண்ணாதீங்க.. வாட்ஸ்அப் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Published

on

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் உள்ளது. கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி, தகவல் பரிமாற்ற முறையை விரைவுப்படுத்தியதோடு, எளிமையாக்கி இருக்கிறது. அடிப்படை இணைய வசதி இருந்தால் உலக மக்களை சில க்ளிக்குகளில் தொடர்பு கொள்ளக்கூடிய வசதியை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.

ஆரம்ப காலத்தில் தகவல் பரிமாற்றத்தை ஒட்டி ஏராளமான வசதிகளை வழங்கிய போதிலும், வாட்ஸ்அப் செயலியில் இன்றளவும் புதுப்புது வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் செயலியில் டிரான்ஸ்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் முதற்கட்டமாக கிடைக்கிறது.

இதை கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட்களை எளிதில் வார்த்தைகளாக மாற்ற முடியும். மேலும், இதற்காக அவர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை புது அப்டேட் நீக்கியிருக்கிறது. தற்போது ஆங்கிலம், ஸ்பானிஷ், போரத்துகீசு, ரஷியன் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் வாய்ஸ் நோட்களை வார்த்தைகளாக மாற்றும் வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்படுகிறது.

விரைவில் இந்த அம்சம் பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப் சாட் பகுதியில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை செயலியின் செட்டிங்ஸில் இருந்த படி செயல்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள சாட்ஸ் ஆப்ஷன் சென்று இந்த வசதியை செயல்படுத்திக் கொள்ளலாம்.

ஆக்டிவேட் செய்யப்பட்டதும், வாய்ஸ் நோட்களின் கீழ் டிரான்ஸ்க்ரிப்ஷனுக்கான ஆப்ஷன் இடம்பெறும். பயனர்கள் அதனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட வாய்ஸ் நோட், எழுத்து வடிவில் டவுன்லோட் செய்யப்படும். பயனரின் வாய்ஸ் நோட்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதில் வாய்ஸ் நோட் அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோர் மட்டுமே அதை இயக்க முடியும்.

google news