tech news
ஒரே Fun தான்.. வாட்ஸ்அப்-இல் வரப்போகும் புது அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் எமோஜிக்கள் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த அம்சம் செயலியில் உள்ள எமோஜிக்களை அனிமேட் செய்யும். ஏற்கனவே இதேபோன்ற அம்சம் ஹார்ட் எமோஜியில் உள்ளது.
தற்போது Wabetainfo வெளியிட்டுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் அனைத்து எமோஜிக்களையும் அனிமேட் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் அனிமேட்டெட் எமோஜி அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் தற்போது வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் ஸ்கைப் செயலி துவங்கப்பட்ட 2004 ஆம் ஆண்டில் இருந்தே வழங்கப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவையை அப்போதே பயன்படுத்தியவர்கள், அதன் எமோஜிக்கள் அனிமேட் ஆவதை நிச்சயம் கவனித்திருப்பார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஸ்பைக் சேவையில் உள்ள அம்சம் தான் தற்போது வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட உள்ளது.
தாமதமாக வழங்கப்பட்டாலும், இந்த அம்சம் ஸ்கைப் சேவையில் இருப்பதை விட அதிக தரமுள்ள ரெசல்யூஷனில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஐஓஎஸ்-இல் இந்த அம்சம் டெஸ்ட்ஃபிளைட் வழியாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான எமோஜிக்களில் அனிமேஷன் வசதி வழங்கப்படுகிறது. படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய அனிமேட்டெட் எமோஜி அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.