Categories: tech news

ஒரே Fun தான்.. வாட்ஸ்அப்-இல் வரப்போகும் புது அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் எமோஜிக்கள் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த அம்சம் செயலியில் உள்ள எமோஜிக்களை அனிமேட் செய்யும். ஏற்கனவே இதேபோன்ற அம்சம் ஹார்ட் எமோஜியில் உள்ளது.

தற்போது Wabetainfo வெளியிட்டுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் அனைத்து எமோஜிக்களையும் அனிமேட் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் அனிமேட்டெட் எமோஜி அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் தற்போது வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் ஸ்கைப் செயலி துவங்கப்பட்ட 2004 ஆம் ஆண்டில் இருந்தே வழங்கப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவையை அப்போதே பயன்படுத்தியவர்கள், அதன் எமோஜிக்கள் அனிமேட் ஆவதை நிச்சயம் கவனித்திருப்பார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஸ்பைக் சேவையில் உள்ள அம்சம் தான் தற்போது வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட உள்ளது.

தாமதமாக வழங்கப்பட்டாலும், இந்த அம்சம் ஸ்கைப் சேவையில் இருப்பதை விட அதிக தரமுள்ள ரெசல்யூஷனில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஐஓஎஸ்-இல் இந்த அம்சம் டெஸ்ட்ஃபிளைட் வழியாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான எமோஜிக்களில் அனிமேஷன் வசதி வழங்கப்படுகிறது. படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய அனிமேட்டெட் எமோஜி அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Web Desk

Recent Posts

மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 'டிரின்பாகோ…

19 mins ago

டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான விதிகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் எத்தனை வீரர்களை…

58 mins ago

மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம்…

2 hours ago

ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.…

3 hours ago

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

22 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

22 hours ago