Connect with us

latest news

இனி எல்லா ‘வீடியோ’வையும் HD-ல அனுப்பலாம்.. வாட்ஸ்அப்-இன் வேற மாறி சம்பவம்!

Published

on

Whatsapp-Featured img

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது. மேலும் பயனர்களுக்கு தொடர்ச்சியாக புதிய அம்சங்களை வழங்குவதில் வாட்ஸ்அப் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் கொண்டு பயனர்கள் HD தரத்தில் புகைப்படங்களை அனுப்ப முடிகிறது. எனினும், இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை தொடர்ந்து வாட்ஸ்அப் தற்போது HD தரத்தில் வீடியோக்களை அனுப்ப முடியும். முந்தைய அம்சம் போன்றே இதுவும் பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட ஆன்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி பார்க்க முடியும். HD போட்டோஸ் அம்சத்தில் உள்ளதை போன்றே, இதிலும் வீடியோக்களை அனுப்பும் போது ‘HD’ பட்டன் இடம்பெற்று இருக்கிறது.

WA-video-HD-sharing

WA-video-HD-sharing

புதிய அம்சத்தின் படி பயனர்கள் வீடியோக்களை அனுப்பும் முன்பே புதிதாக ‘HD’ என்ற பட்டனை திரையின் மேல்புறத்தில் பார்க்க முடியும். இதனை க்ளிக் செய்தால் SD மற்றும் HD என இரண்டு வீடியோ ஆப்ஷன்களை திரையில் பார்க்க முடியும். SD தரம் வாட்ஸ்அப் கம்ப்ரெஸ் செய்யும் சாதாரன வீடியோ தரம் ஆகும். HD ஆப்ஷனில் வீடியோ தரம் குறையாமல் அப்படியே அனுப்பப்படும்.

வாட்ஸ்அப் செயலியில் SD தர வீடியோ 416×880 பிக்சல் ரெசல்யூஷன், 6.3MB ஃபைல் சைஸ்-இல் இருக்கும், HD தர வீடியோ 608×1296 பிக்சல் ரெசல்யூஷன், 12MB ஃபைல் சைஸ்-இல் இருக்கும். உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான செயலி என்ற அடிப்படையில், இந்த ஃபைல் சைஸ்-ஐ எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பிவிட முடியும்.

இந்த அம்சம் கிட்டத்தட்ட HD போட்டோஸ் இயங்குவதை போன்றே செயல்படுகிறது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.14.10 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் பீட்டா திட்டத்தில் இருப்பவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் விண்டோஸ் வெர்ஷனில் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 32 பேருடன் வீடியோ காலில் பேசும் வசதிக்கான டெஸ்டிங் நடைபெறுவதாக தகவல் வெளியானது. அந்த வரிசையில் தற்போதைய HD வீடியோ அனுப்பும் வசதியைும் பீட்டா டெஸ்டிங்கிலேயே உள்ளது. இரு அம்சங்களும் பீட்டா டெஸ்டிங்கில் உள்ள நிலையில், இவை எப்போது அனைவரும் பயன்படுத்தும் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

google news