latest news
இது தாங்க முக்கியமே.. லிஸ்ட் போடும் வாட்ஸ்அப்.. எதற்கு தெரியுமா?
உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தி வரும் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்குவதில் வாட்ஸ்அப் குறிக்கோளாக கொண்டுள்ளது. ஒருபுறம் புதிய அம்சங்களை வழங்குவது, மறுபுறம் பீட்டா வெர்ஷனில் எதிர்கால அம்சங்களை டெஸ்டிங் செய்வது என வாட்ஸ்அப் புது அம்சங்களை வழங்குவதில் ஆரம்பத்தில் இருந்து இதுவரையில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை என்றே கூறலலாம்.
வாட்ஸ்அப் தனது செயலியில் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை பல முறை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வரிசையில், தற்போது வாட்ஸ்அப் செயலியில் கிட்டத்தட்ட பத்து பிரைவசி சார்ந்த அம்சங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சாட் லாக் அம்சம் இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட சாட்களை மட்டும் கைரேகை சென்சார் மூலம் லாக் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் கிடைக்கும் ஐந்து மிகமுக்கிய பிரைவசி சார்ந்த அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
– வாட்ஸ்அம் சமீபத்தில் தான் தனிப்பட்ட சாட்களை லாக் செய்வதற்கான வசதியை வழங்கியது. இதற்கு பயனர்கள் சாட் ப்ரோஃபைல் பகுதியில் சாட் லாக் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதே வழிமுறை கொண்டு அனைத்து சாட்களையும் லாக் செய்து கொள்ளலாம். லாக் செய்யப்படும் சாட்கள் ஃபோல்டரில் சேர்க்கப்பட்டு விடும். இவை திரையின் மேல்புறத்தில் காணப்படும்.
– இந்த செயலியில் புளூ டிக்-களை மறைத்து வைப்பதற்கான ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்களை நீங்கள் படித்தீர்களா அல்லது படிக்கவில்லையா என்றே தெரியாது. இந்த அம்சம் செட்டிங்ஸ் — பிரைவசி — ரீட் ரெசிப்ட்ஸ் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.
– உங்களது நம்பர் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் உங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு தெரிந்த மொபைல் நம்பர்களை பிளாக் செய்வதற்கான ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வசதி பிரைவசி செட்டிங்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கிறது.
– வாட்ஸ்அப் செயலியில் கைரேகை சென்சார் மூலம் லாக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மற்றவர்கள் உங்களது மொபைல் பயன்படுத்த நேரிட்டாலும், உங்களின் வாட்ஸ்அப் சாட்கள் பாதுகாப்பாக யாரும் பார்க்க விடாமல் செய்யவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை செயல்படுத்த செட்டிங்ஸ் — பிரைவசி — ஃபிங்கர்-ப்ரின்ட் லாக் ஆப்ஷன்களை க்ளிக் செய்து, எனேபில் செய்ய வேண்டும்.
– செயலியில் உங்களின் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் படம், லாஸ்ட் சீன் உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட கான்டாக்ட்களுக்கு மட்டும் மறைப்பதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சமயங்களில், முன்பின் அறியாதவர்களுடன் செயலியில் தொடர்பு கொள்ள நேரிடும் போது, ப்ரோஃபைல் படங்களுக்கு மட்டும் இந்த அம்சம் அதிகளவில் பயன்படுகிறது.