latest news
இனி கஷ்டப்படாதீங்க.. வாட்ஸ்அப்-இல் சூப்பர் அப்டேட்..!
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். தினமும் கோடிக் கணக்கானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் பல நூறு கோடி தகவல்கள் பகிரப்படுகின்றன. உலகளவில் மிக முக்கிய தகவல் பரிமாற்ற முறையாக வாட்ஸ்அப் விளங்கி வருகிறது.
அந்த வகையில், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில், தற்போது வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் பயனர்கள் நேரடியாக காண்டாக்ட் சேவ் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இதன் காரணமாக வாட்ஸ்அப் காண்டாக்ட்களை இயக்க போனின் அட்ரஸ் புக்-ஐ சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், வாட்ஸ்அப் வெப் மற்றும் விண்டோஸ் வெர்ஷன்களிலும் பயனர்கள் காண்டாக்ட்களை சேவ் செய்து கொள்ளலாம்.
புதிய அப்டேட் மூலம் பயனர்கள் புதிய போன் நம்பர்களை நேரடியாக வாட்ஸ்அப்-இல் சேவ் செய்து கொள்ளலாம். இத்துடன் கான்டாக்ட்-ஐ போனின் காண்டாக்ட்களில் சின்க் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
இது வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்படும் காண்டாக்ட்கள் நேரடியாக மொபைல் காண்டாக்ட்-இல் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்தும். இந்த அப்டேட் மூலம் சாதனங்களில் இருந்து தரவுகள் அழிந்தாலும், வாட்ஸ்அப்பில் காண்டாக்ட்களுக்கு நேரடியாக மெசேஞ் அனுப்ப முடியும்.
இந்த வசதியை வழங்குவதற்காக வாட்ஸ்அப் என்க்ரிப்டெட் ஸ்டோரேஜ் சிஸ்டம் பயன்படுத்துகிறது. இந்த சிஸ்டம் ஐடென்டிட்டி ப்ரூஃப் லின்க்டு ஸ்டோரேஜ் என அழைக்கப்படுகிறது. இது செயலியில் காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும். இவ்வாறு சேவ் செய்யப்படும் காண்டாக்ட்கள் முழுமையாக என்கரிப்ட் செய்யப்படுவதோடு, இவற்றை பயனர்கள் மட்டும் தான் இயக்க முடியும்.