latest news
குழந்தைகளுக்கு பான் கார்டு பெற வேண்டுமா? உடனே விண்ணப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!
பான் கார்டு என்றாலே, அதனை பெரியர்கள் தான் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்து பெரும்பாலாக நிலவுகிறது. எனினும், 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் கூட பான் அட்டை வாங்கி வைத்துக் கொள்ளலாம். பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ வளர்ப்பவர் உதவியோடு பான் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
குழந்தைகள் பான் அட்டை எப்போது பெற வேண்டும்?
- பெற்றோர் தங்களது குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் போது பான் அட்டை அவசியம் ஆகும்.
- வேறு ஏதேனும் முதலீடுகளில் குழந்தையின் பெயர் பயன்படுத்தும் பட்சத்தில் பான் அட்டை பெற வேண்டும்.
- குழந்தைக்கு வங்கி கணக்கு பெறுவதற்கு பான் அட்டை அவசியம் ஆகும்.
- குழந்தை ஏதேனும் வருவாய் ஈட்டும் போது, பான் அட்டை பெற்றிருக்க வேண்டும்.
- ஆன்லைனில் குழந்தைக்கான பான் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறைகள்
- முதலில் NSDL அதிகாரப்பூர்வ வலைதளம் செல்ல வேண்டும்.
- இனி சரியான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பிரிவை பதிவிட்டு, 49A படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- குழந்தையின் வயது, பெற்றோர் புகைப்படம் மற்றும் இதர தேவையான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும்.
- படிவத்தில் பெற்றோரின் கையெழுத்து மட்டும்தான் தேவை.
- விண்ணப்பிக்கும் போது ரூ. 107 கட்டணம் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதும், அதனை உறுதிப்படுத்தும் விண்ணப்ப படிவ எண் அனுப்பப்படும். அதை கொண்டு விண்ணப்ப நிலையை சரிபார்க்க முடியும்.
- பான் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதும் பான் அட்டை மின்னஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்பப்பட்டு விடும்.
நேரடியாக விண்ணப்பிப்பது எப்படி?
- ஆன்லைனில் இருந்து 49A படிவத்தை டவுன்லோட் செய்து, அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
- குழந்தையின் இரண்டு புகைப்படங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை NSDL அலுவலத்தில் கட்டண ரசீதுடன் சமர்பிக்க வேண்டும்.
- வெரிஃபை செய்த பிறகு, பான் அட்டை அலுவலகத்தில் வழங்கப்பட்ட முகவரிக்கு அனுப்பப்பட்டு விடும்.