latest news
காக்னிசெண்ட்(Cognizent) நிறுவனம் 3500 ஊழியர்களை வெளியேற்ற காரணம் என்ன?..
இந்த காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ்(AI) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வரும் காலங்களில் இதன் பங்கு உலகளாவிய அளவில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களின் தேவை பெரிய நிறுவனங்களில் குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் பிரபல மென்பொருள் நிறுவனமான Cognizent தனக்கு கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் 3500 பேரைபணி நீக்கம் செய்துள்ளது. இது அவர்களின் மொத்த பண்யாளர்களில் 1% ஆகும்.மேலும் இந்த நிறுவனமானது நாட்டின் சில பகுதிகளில் உள்ள இதன் அலுவலகங்களையும் மூட திட்டமிட்டுள்ளது.
இதைப்பற்றி இதன் தலைமை அதிகாரி ரவிகுமாரிடம் கேட்டபொழுது Cognizent நிறுவனமானது தற்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை சோதிப்பதாகவும் மேலும் இந்த AI கன்சல்டிங், டிசைன், எஞ்சினியரிங் போன்ற பல்வேறு துறைகளில் மிக வேகமாகவும் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறனை இருமடங்காக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் வரும்காலங்களில் ஜெனரேடிவ் ஏ.ஐ(Generative AI) என அழைக்கப்படும் இந்த அறிவியலில் மேலும் முதலீடு செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவியலானது பல வகைகளில் தங்களுக்கு உதவும் எனவும் 30 பேரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் Cognizent நிறுவனம் $200 மில்லியனை வேலைவாய்ப்பை இழந்த உழியர்களுக்காக செலவிடபோவதாகவும் தெரிவித்துள்ளது.