செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையை பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்தது. நாளடைவில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிலர் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், ஒருசிலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஐ. பற்றிய கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்றாலும் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிவித்தார். மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் நோக்கம் ஒரு பணியை விரைந்து செய்து முடிக்க உதவுவதும், பயிற்றுநர்களை போன்று செயல்படுவது தான். இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மிகமுக்கிய இடங்களில் இந்த தொழில்நுட்பம் நமக்கு உதவி செய்யும் என்பதே இந்த தொழில்நுட்பத்தின் வியக்கவைக்கும் விஷயம். சரியாக கையாளும் போது இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மேலும் வேகமாக செய்துமுடிக்க உதவிகரமாகவே இருக்கும். மென்பொருள் பொறியாளர்கள் விவகாரத்தில், வரும் ஆண்டுகளிலும் மனித பொறியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும்.
ஒருநாள் ஏ.ஐ. ஆட்டோமேஷன் முறை மாபெரும் வளர்ச்சி கண்டு ஏராளமான வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலை நிச்சயம் வரும். எனினும், இதுபோன்ற சூழல் இன்னும் இருபது ஆண்டுகளில் உருவாவதும் கடினம் தான். தொழிலாளர்கள் மத்தியில் ஏ.ஐ. ஏற்படுத்தும் நீண்ட கால தாக்கம் பற்றி தற்போதைக்கு எதையும் கணிக்க முடியாது என்று தெரிவித்தார்.
ஏ.ஐ. என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்ததில் இருந்தே, அவை பற்றிய வியப்பான பார்வை இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. இதே போன்று அவை மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடுமோ என்ற அச்ச உணர்வும் மேலோங்கியே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், ஏ.ஐ. குறித்து பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…