Connect with us

tech news

இன்ஸ்டா பக்கம் போனது குத்தமா? ரூ. 74 லட்சம் இழந்த பெண் – எப்படி தெரியுமா?

Published

on

இந்தியாவில் இணைய சேவைகளின் பயன்பாட்டு அதிகரிக்க துவங்கியதில் இருந்து சைபர் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. சைபர் குற்ற செயல்கள் குறித்து அரசாங்கமும், காவல் துறை அதிகாரிகளும் எச்சரித்து வருகின்றனர். எனினும், மக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்குவது தொடர்கதையாகவே உள்ளது.

அப்படியாக மங்களூருவை சேர்ந்த பெண் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ரூ. 74 லட்சத்தை இழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் போது, பங்கு சந்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று கூறிய பதிவை கடந்து வந்தார். அதனை பார்த்ததும், ஏன் பங்கு சந்தையில் முதலீடு செய்யக்கூடாது என்று நினைத்தார்.

அதன்படி, உடனே அந்த இன்ஸ்டா பதிவில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். மறுபுறம் அந்த பதிவை வெளியிட்ட கும்பல் பெண்ணை வாட்ஸ்அப்-இல் தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அப்போது பங்கு சந்தை முதலீடு மூலம் அதிக வலாபம் பெறலாம் என்று அந்த நிறுவனம் பெண்ணிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த பெண் D101 Artemis Seminar Group-இல் சேர்க்கப்பட்டார்.

இந்த வாட்ஸ்அப் க்ரூப்-இல் இருந்து பெண்ணிற்கு தொடர்ச்சியாக பங்கு சந்தை முதலீடு தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி ஆர்டெமிஸ் பிராஃபிட் டிரேடிங்கில் டிபரேடிங் அக்கவுண்ட் துவங்கப்பட்டது. இதன் பிறகு அந்த ஹேக்கர்கள் பெண்ணை ஏமாற்றி, அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி வந்துள்ளனர்.

இதை கேட்டு அந்த பெண் பல தவணைகளில் பல்வேறு அக்கவுண்ட்களுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். தொடர்ந்து பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறிய அந்த கும்பல் அவரின் மனதை மயக்கி கிட்டத்தட்ட ரூ. 73.6 லட்சம் வரை பெற்றுள்ளது. பல அக்கவுண்ட்களில் பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது. நாளடைவில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் பொறுமையை இழந்த பெண், முதலீடு செய்த பபணத்தை திரும்ப எடுக்க முயற்சித்துள்ளார். எவ்வளவு முயற்சித்தும் அந்த பெண்ணால் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் சைபர் குற்றவியல் துறையில் புகார் அளித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *