Connect with us

latest news

மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் செயலிழப்பு.. திணறும் வங்கிகள், விமான நிலையங்கள்!

Published

on

மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர் செயலிழப்பு உலகம் முழுவதும் வங்கி, விமானம் மற்றும் ரயில் என பல்வேறு அத்தியாவசிய சேவைகளை முடக்கியிருக்கிறது.

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் வழங்கி வரும் சேவைகளில் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சம் முக்கியமானது. இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஏற்பட்ட குளறுபடி மைக்ரோசாஃப்ட் 365 செயலிகளின் செயல்பாட்டைப் பதம் பார்த்தது.

ஸ்டோரேஜூக்கும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் கம்யூட்டிங் சிஸ்டம் இடையிலான தொடர்பு அறுந்துபோன நிலையில், உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் 365 செயலிகள் மொத்தமாக முடங்கின.
இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை சார்ந்து இயங்கும் வங்கிகள், விமான சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் பல விமான நிறுவனங்கள், சேவைகளை ரத்து செய்திருக்கின்றன. ஜெர்மனியில் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட முக்கியமான விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் எடுப்பது உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன போர்டிங் பாஸ்களை ஊழியர்கள் கைகளில் எழுதிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்று மைக்ரோசாஃப்ட் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

google news