Connect with us

tech news

போன் வாங்கினால் வாட்ச் இலவசம் – சியோமி அறிவித்த சூப்பர் சலுகை

Published

on

சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி 14 சிவி என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது சியோமி ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகை இன்று துவங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகையின்படி சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 2999 மதிப்புள்ள ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் ஸ்மார்ட்வேட்ச் இலவசமாக வழங்கப்படும்.

இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் புது சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைட் கேமரா, 50MP 2X டெலிபோட்டோ கேமரா மற்றும் 32MP டூயல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் 5G கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் OS வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை விவரங்கள்:

சியோமி 14 சிவி 8GB + 256GB ரூ. 42,999
சியோமி 14 சிவி 12GB + 512GB ரூ. 47,999

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 20 ஆம் தேதி துவங்குகிறது. ஆன்லைனில் Mi மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களிலும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும்.

இதர சலுகைகள்:

  • ICICI வாங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3000 உடனடி தள்ளுபடி
  • மூன்று மாதங்களுக்கு YouTube சந்தா இலவசம்
  • 6 மாதங்களுக்கு 100GB வரை கூகுள் ஒன் சந்தா இலவசம்
  • சியோமி Priority Club சந்தா இலவசம்
google news

latest news

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

Published

on

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ், மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தை கூடுதல் விருப்பமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வெளியான தகவல்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில்) கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி இந்த திட்டத்தை அமல்படுத்த முன்மொழிந்துள்ளார்.

அதன்படி மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கலின் பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து பயன்பெற்ற 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜ்னா நன்மைகளை மையம் விரிவுபடுத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கையானது, கிட்டத்தட்ட 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, அவர்களுக்கு ஒரு தனித்துவமான அட்டை மற்றும் கூடுதல் கவரேஜ் விருப்பங்களை தற்போதைய பயனாளிகளுக்கு வழங்குகிறது.

பயனாளிகள் தங்களுக்கு இருக்கும் பலன்கள் அல்லது PM-JAY ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட மூத்த குடிமக்கள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் (ESIS) கீழ் வருபவர்களும் PM-JAY திட்டத்தின் பலன்களுக்குத் தகுதி பெற முடியும்.

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் (CPC) ஊதிய கணக்கீடு அடிப்படையில் பங்களிப்புத் தொகை ஒன்று முதல் ஐந்து நிலைகளில் ரூ. 30,000, ஏழு முதல் 11 நிலைகளில் ரூ. 78,000 மற்றும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் ரூ. 1,20,000 ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிஸ்ரா எழுதியிருக்கும் கடிதத்தில், ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு CGHS நன்மைகளைப் பெறுவதற்கு ஒரு முறை பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை மேற்கோள் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், மூத்த குடிமக்கள் CGHS மற்றும் AB PM-JAY இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வைப்பது நியாயமற்றது என்றும் PM-JAY மூத்த குடிமக்களுக்கு அவர்களின் நிதி நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் உதவ உருவாக்கப்பட்டது என்று மிஸ்ரா குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மிஸ்ரா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து மேலும் விவாதிக்க வேண்டும் என்றும், இதற்காக தேசிய கவுன்சிலான JCM-இன் ஊழியர்கள் தரப்புடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

google news
Continue Reading

latest news

வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!

Published

on

தமிழ்நாட்டில் நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பட்டா எனப்படும் இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நிலத்தின் வகை, நிலம் எங்கு அமைந்துள்ளது உள்பட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

தமிழகத்தில் வருவாய் துறை சார்ந்த ஆவணங்களை பெற அதிக கால தாமதம் ஏற்டுவது, வருவாய் துறைக்கு மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சேவைகளும் தாமதமாகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், வருவாய் துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறும் போது, “தமிழ்நாடு அரசின் வருவாய் துறை இயக்குநரின் உத்தரவுப்படி வருவாய்த் துறை சார்ந்த பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். இதனை நிறைவேற்ற கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.”

“உத்தரவின் படி ஆன்லைனில் விண்ணப்பம் அப்லோடு செய்த நாளில் இருந்து சரியாக 15 நாட்களுக்குள் அது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு, மக்களுக்கு ஆவணங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருவேளை காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு உரிய காரணம் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை இணைக்க வலியுறுத்த வேண்டும். இதன் காரணமாக வருவாய் துறை சார்ந்த பட்டா மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை 15 நாட்களுக்குள் செய்து முடிக்கலாம்,” என்று தெரிவித்தார்.

புதிய உத்தரவு காரணமாக வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் 26 வகையான ஆவணங்கள், சான்றிதழ்கள் கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேணஅடும். இதனால், மக்களுக்கு வருவாய் துறை சார்ந்த ஆவணங்கள் எளிதில் கிடைப்பதோடு, உடனடி தீர்வும் கிடைக்கும்.

google news
Continue Reading

latest news

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

Published

on

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வில் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், விரைவில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும், ஒரிரு வாரங்களில் கூடும் மத்திய அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில், ஏழாவது ஊதியக்குழுவின்படி டிஏ, டிஆற் அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படலாம். ஒருவேளை அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் நடந்தால், நவராத்திரி நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றி செய்தி வந்து சேரும்.

ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் கூட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வந்துவிடும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஜூலை 2024-க்கான டிஏ மூன்று முதல் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை 53 முதல் 54 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை மாதம் துவங்கி டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சேர்த்தே வழங்கப்படும்.

google news
Continue Reading

latest news

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

Published

on

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும். தற்போது இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சுமார் 800 ரூபாயில் துவங்குகிறது.

தொடர்ச்சியாக கியாஸ் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருவதால், ஏழை எளியோரால் கியாஸ் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மேலும், பலர் கியாஸ் விலை உயர்வு காரணமாக மின்சார அடுப்பு, இதர மாற்று எரிசக்தியை சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில், ரூ. 500-க்கும் குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? நாட்டில் மெல்ல பயன்பாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் புதிய வகை சிலிண்டர் ரூ. 500-க்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிலிண்டர்கள் ‘கம்போசிட் சிலிண்டர்” என அழைக்கப்படுகிறது. சாதாரண சமையல் கியாஸ் சிலிண்டர் எடை 14.2 கிலோ எடை கொண்டிருக்கும் நிலையில், கம்போசிட் சிலிண்டர்களின் எடை 10 கிலோவாக இருக்கும். குறைந்த விலை காரணமாக இதன் எடை குறைவாக இருக்கிறது. மேலும், இந்த சிலிண்டர்கள் மிக பாதுகாப்பாக உருவாக்கப்படுகின்றன.

மேலும், இதன் வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை காரணமாக இவற்றை எளிதில் தூக்க முடியும். இந்த சிலிண்டரில் கியாஸ் எவ்வளவு மீதம் இருக்கிறது. எப்போது கியாஸ் தீர்ந்து போகும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். கியாஸ் சிலிண்டர் தீர்ந்து போனாலும், இவற்றை உடனே பெற்றுக் கொள்ள முடியும்.

google news
Continue Reading

latest news

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

Published

on

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்தது தான். இந்த விஷயத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், இந்தியாவில் ரூ. 10,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் ரூ. 10,000 நோட்டுக்கள் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. 1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன் முதலில் ரூ. 10,000 நோட்டை புழக்கத்திற்கு விட்டது. அன்றைய காலக்கட்டத்தில் புழக்கத்தில் விடப்பட்ட மிகப்பெரிய ரூபாய் நோட்டாக அது இருந்தது.

ரூ. 10,000 நோட்டு வியாபாரிகள் மற்றும் வர்த்தகம் செய்வோர் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த நோட்டுக்களை ஏழை எளியோர் பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு ஆகும். இந்த நோட்டுக்களை பெரிய அளவில் வியாபாரம் செய்து வந்த சிலர் மத்தியிலேயே புழக்கத்தில் இருந்தது.

எனினும், 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரிடிஷ் அரசாங்கம் ரூ. 10,000 நோட்டுக்களை மதிப்பிழக்க செய்து உத்தரவிட்டது. அன்றைய காலக்கட்டத்தில் கருப்பு பணம் அதிகளவில் புழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கையை அன்றைய பிரிடிஷ் அரசு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு 1954 ஆம் ஆண்டு ரூ. 10,000 நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இத்துடன் ரூ. 5000 நோட்டும் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், 1978 ஆம் ஆண்டு இந்திய அரசு ரூ. 10,000 மற்றும் ரூ. 5000 நோட்டுக்களை மீண்டும் மதிப்பிழக்க செய்தது.

google news
Continue Reading

Trending