பார்க்கவே சூப்பரா இருக்கே.. சியோமி பாண்டா எடிஷன் போன் அறிமுகம் – விலை எவ்வளவு?

0
103

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது சியோமி 14 சிவி பாண்டா லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் குரூயிஸ் புளூ, மேட்சா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இதன் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஹாட் பின்க், பாண்டா வைட் மற்றும் அக்வா புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதில் அக்வா புளூ நிறம் சியோமி SU7 EV காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் டோன் டிசைன், வீகன் லெதர், கிளாஸ் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இவைதவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அதன்படி சியோமி 14 சிவி பாண்டா லிமிட்டெட் எடிஷன் மாடலிலும் 6.55 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்பளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU, அதிகபட்சம் 12GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலையை பொருத்தவரை சியோமி 14 சிவி பாண்டா லிமிட்டெட் எடிஷன் மாடலின் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 48,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 3000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here