Connect with us

latest news

ரூ. 10,000-ஐ விட கம்மி விலை.. சூப்பர் 5ஜி போன் அறிமுகம்

Published

on

சியோமி நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து புதிய ரெட்மி A சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ரெட்மி A4 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2024 நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

இந்திய சந்தையில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெற்றிருக்கிறது. என்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதால், ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை கணிசமான அளவுக்கு குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி A4 5ஜி மாடலில் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த சிப்செட் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கீக்பென்ச் டெஸ்டிங்கில் இதில் உள்ள சிப்செட் முந்தைய A சீரிஸ் மாடலில் வழங்கப்பட்ட ஹீலியோ G36 சிப்செட்-ஐ விட இருமடங்கு அதிக புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், விலையை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் விலை நிச்சயம் ரூ. 10,000 பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

சியோமி நிறுவனம் தனது முந்தைய ரெட்மி A3 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. தற்போது புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

google news