Categories: latest newstech news

ரூ. 10,000-ஐ விட கம்மி விலை.. சூப்பர் 5ஜி போன் அறிமுகம்

சியோமி நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து புதிய ரெட்மி A சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ரெட்மி A4 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2024 நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

இந்திய சந்தையில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெற்றிருக்கிறது. என்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதால், ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை கணிசமான அளவுக்கு குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி A4 5ஜி மாடலில் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த சிப்செட் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கீக்பென்ச் டெஸ்டிங்கில் இதில் உள்ள சிப்செட் முந்தைய A சீரிஸ் மாடலில் வழங்கப்பட்ட ஹீலியோ G36 சிப்செட்-ஐ விட இருமடங்கு அதிக புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், விலையை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் விலை நிச்சயம் ரூ. 10,000 பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

சியோமி நிறுவனம் தனது முந்தைய ரெட்மி A3 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. தற்போது புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Web Desk

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

4 hours ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

4 hours ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

4 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

5 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

5 hours ago