சியோமி நிறுவனம் தனது புதிய செல்பி ஸ்டிக் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது செல்பி எடுக்கும் ஆர்வம் கொண்டவர்கள், Vlog செய்பவர்கள் மற்றும் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில், மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் ரிமோட் மற்றும் ஹிடென் டிரைபாட் வழங்கப்படுகிறது.
ஸ்டான்ட் ஸ்டைல் கொண்டிருக்கும் சியோமி செல்பி ஸ்டிக் மினி வெர்ஷன்: டீப் ஸ்பேஸ் பிளாக் மற்றும் மில்க் டீ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இது மிகக் குறைந்த எடை (155 கிராம்) கொண்டுள்ளது.
மேலும், இதன் கச்சிதமான வடிவமைப்பு இதனை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்லக்கூடியதாக மாற்றுகிறது. இந்த செல்பி ஸ்டிக் 520 மில்லிமீட்டர் அளவுக்கு நீளும் திறன் கொண்டுள்ளது. இதை கொண்டு வைடு ஆங்கில் ஷாட்களை எடுக்க முடியும்.
இதில் உள்ள டெலிஸ்கோபிக் ராடு அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது குறைந்த எடை என்ற போதிலும் மிக உறுதியான வடிவமைப்பை கொண்டுள்ளது.
இதில் ஹிடென் போன் ஹோல்டர் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட டிரைபாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பல்வேறு புகைப்பட தேவைகளை பூர்த்தி செய்கிறது. இத்துடன் பில்ட்-இன் சுழலும் போன் ஹோல்டர் உள்ளது.
இதை கொண்டு மொபைலை 90 டிகிரி அளவுக்கு வலது புறம் மற்றும் இடது புறத்தில் சுழற்ற முடியும். இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆன்டி-ஸ்லிப் பக்கிள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பல்வேறு அளவுகளில் கிடைக்கும் மொபைல் போன்களை கச்சிதமாக வைத்துக் கொள்ள செய்கிறது. ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுவதால், 10 மீட்டர் தொலைவில் இருந்தும் இதனை இயக்க முடியும்.
முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் சியோமி ஸ்டான்ட் ஸ்டைல் செல்பி ஸ்டிக் மினி விலை 11 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 924 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…