tech news
சியோமியின் முதல் ப்ளிப் போன் வெளியீடு எப்போ? அப்டேட் கொடுத்த அதிகாரி
சியோமி நிறுவனத்தின் முதல் ப்ளிப் போன் மாடல்- சியோமி மிக்ஸ் ப்ளிப் சமீபத்தில் தான் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கிளாம்ஷெல் ஸ்டைல் கொண்ட சியோமி மிக்ஸ் ப்ளிப் சியோமி மிக்ஸ் போல்டு 4 மற்றும் ரெட்மி K70 அள்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச வெளியீடு பற்றிய தகவல்கள் மர்மாகவே இருந்துவந்தது. இந்த நிலையில், சியோமி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் மிக்ஸ் ப்ளிப் போனின் சர்வதேச வெளியீடு தொடர்பான அப்டேட் கொடுத்துள்ளார்.
அதன்படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போன் பல்கேரியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு விற்பனைக்கு வரும் என்பதை சியோமி பல்கேரியா மேலாளர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு, இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை BGN 2,600 இந்திய மதிப்பில் ரூ. 1,20,800 என நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பல்கேரியாவில் இது சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலின் விலையை விட அதிகம் ஆகும். சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை CNY 5,999 இந்திய மதிப்பில் ரூ. 69,300 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை சியோமி மிக்ஸ் ப்ளிப் மாடலில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ், 6.86 இன்ச் 1.5K Flexible AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 120Hz ரிப்ரெஷ் ரேட், 4.01 இன்ச் Flexible AMOLED பேனல் கொண்ட கவர் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16GB ரேம் வழங்கப்படுகிறது.
இத்துடன் 50MP டூயல் கேமரா சென்சார்கள், 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4780mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 67W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இதன் எடை 192 கிராம் ஆகும்.