சியோமி நிறுவனம் சீன சந்தையில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. இவை சியோமி மிக்ஸ் போல்டு 4 மற்றும் மிக்ஸ் ப்ளிப் என அழைக்கப்படுகின்றன. இதில் மிக்ஸ் போல்டு 4 மாடல் அந்நிறுவனத்தின் மிக்ஸ் போல்டு 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடலில் ஹார்டுவேர் மற்றும் கேமரா மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. சியோமியின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், லெய்கா பிராண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய சியோமி மிக்ஸ் போல்டு 4 மாடலில் 7.98 இன்ச் 2K+ LTPO டிஸ்ப்ளே, 6.56 இன்ச் FHD+ TCL கவர் டிஸ்ப்ளே உள்ளது. இவை இரண்டும் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கின்றன. இத்துடன் HDR10+ மற்றும் டால்பி விஷன் வசதி உள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் 12GB/16GB ரேம், 256GB / 512GB / 1TB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5100mAh பேட்டரி, 67W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.
போட்டோ எடுக்க 50MP பிரைமரி கேமராOIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 20MP செல்பிகேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ளது. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
சியோமி மிக்ஸ் ப்ளிப் மாடலில் 6.86 இன்ச் 1.5K TCL C8+ LTPO டிஸ்ப்ளே, 4 இன்ச் 1.5K TCL C8+ LTPO கவர் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் HDR10+ மற்றும் டால்பி விஷன் உள்ளது. இந்த மாடலில் 4780mAh பேட்டரி, 67W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க ப்ளிப் மாடலில் 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…