tech news
பார்க்கவே பயங்கரமா இருக்கு.. லீக் ஆன புது ரெட்மி நோட் சீரிஸ் மாடல்
சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி நோட் 14 5ஜி மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்சிசி வலைதளத்தில் இடம்பெற்று இறுக்கிறது. சமீபத்தில் இந்த மாடல் சர்வதேச IMEI டேட்டாபேஸிலும் இடம்பெற்று இருந்தது. எஃப்சிசி லிஸ்டிங்கில் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சார்ஜிங், மென்பொருள் மற்றும் வயர்டு, வயர்லெஸ் சார்ஜிங் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி நோட் 14 5ஜி மாடல் ஹைப்பர் ஓஎஸ் 1, வைபை AC, ப்ளூடூத் LTE மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 33W அடாப்டர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. எனினும், சார்ஜிங் வேகம் எப்படி இருக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
எஃப்சிசி தகவல்கள் இன்றி ரெட்மி நோட் 14 மாடல் 1.5K AMOLED ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 13 5ஜி மாடலில் FHD பேனல், 108MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட பிராசஸர் ஆகும். இத்துடன் Arm மாலி-G57 MP2 கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.