Connect with us

tech news

பல நாள் நீடிக்கும் பேட்டரி.. Xiaomi சூப்பர் திட்டம்

Published

on

சியோமி நிறுவனம் தனது பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிகபட்சம் 5000mAh பேட்டரியை வழங்கி வருகிறது. மேலும் அதிகபட்சம் 120W சார்ஜிங் வசதியை வழங்குகிறது. இவை அந்நிறுவனத்தின் சமீபத்திய டாப் எண்ட் மாடல்களில் வழங்கப்படுகிறது.

சீன சந்தையில் சியோமி சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி K70 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி, 120W சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை 24 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். ஸ்மார்ட்போன் சந்தையில் பல நிறுவனங்களும் தங்களின் மொபைல்களில் அதிகபட்சம் 5000mAh முதல் 6000mAh வரையிலான பேட்டரியை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட தகவல்களில் சியோமி நிறுவனம் 5500mAh, 6000mAh, 7000mAh மற்றும் 7500mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை டெஸ்டிங் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இவற்றில் அதிகபட்சம் 100W அல்லது 120W சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ஏஸ் ப்ரோ மாடலில் அதிகபட்சமாக 6100mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போனை 36 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும்.

ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ந்த தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏற்கனவே ஒன்பிளஸ், ஹானர் போன்ற பிரான்டுகள் சிலிகான்-கார்பன் நெகடிவ் எலெக்ட்ரோட் பேட்டரியை பயன்படுத்த துவங்கியுள்ளன. இவை சிறிய அளவில் அதிக திறன்களை வழங்கும் வகையிலான டிசைன் கொண்டுள்ளன.

தற்போதைக்கு பேட்டரி திறன் மட்டும் அதிகரிக்கும் நிலையில், சார்ஜிங் வசதியை மட்டும் 100W, 120W அல்லது அதிகபட்சமாக 150W வரை மட்டுமே வழங்குகின்றன.

google news