ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பலரின் குற்றச்சாட்டாக இருப்பது புலோட்வேர்கள் தான் எனலாம். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவது அவ்வளவு எளிய காரியமில்லை. இந்த விவகாரத்தில் சியோமி மட்டும் விதிவிலக்கா என்ன?
புதிய ஆண்ட்ராய்டு போன் வாங்குவோர் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்றும் நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. இதுதவிர, விளம்பரங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பலர் கூறும் குறைகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்த நிலையில், சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்று பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் விளம்பரங்களை தடை செய்வதற்கு ஒற்றை டாகில் பட்டனை வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியிடம், சியோமி நிறுவனம் இந்த தகவல்கள் குறித்து பதில் அளித்துள்ளது. அதில், சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் எண்ணிக்கையை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.
கடந்த மாதம் சியோமி ஸ்மார்ட்போன்களில் விளம்பரங்களை மறைக்க செய்யும் வசதி செட்டிங்ஸ் ஆப்ஷனில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பெயருக்கு ஏற்றார்போல் இந்த அம்சம் சிஸ்டம் செயலிகளில் உள்ள விளம்பரங்களை மறைத்துவிடும். இந்த அம்சம் ஹைப்பர் ஓஎஸ்-இல் காணப்பட்டது.
இது குறித்து பதில் அளித்த சியோமி, விளம்பரங்களை மறைக்க செய்யும் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படாது என்றும், இது தேர்வு செய்யப்பட்ட மிக குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவித்து உள்ளது. மேலும், அனைத்து பயனர்களுக்கும் பயனுள்ள வகையிலான மாற்றங்களை கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…