சியோமி நிறுவனமும் புதுவகை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவரை உள்ள மாடல்களை விட வித்தியாசமாக இருக்கும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை மூன்றாக மடித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான மற்றொரு தகவல்களில் ஹூவாய் நிறுவனம் மூன்றாக மடித்து வைத்துக் கொள்ளும் வகையில் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இந்த வரிசையில், தற்போது சியோமி நிறுவனமும் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவை சேர்ந்த சியோமியின் புதிய வகை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது. இது குறித்த விவரங்களை டிப்ஸ்டரான ஸ்மார்ட் பிக்காச்சு வெய்போ தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சியோமி நிறுவனமும் மூன்றாக மடித்து வைத்துக் கொள்ளும் வகையிலான புது ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மாடல் வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை போன்று இல்லாமல், மூன்று வெவ்வேறு திரைகள் தனித்தனியாக வித்தயாசப்பட்டு காட்சியளிக்கும். இவற்றை பிரித்தால், உள்புறத்தில் இந்த ஸ்மா்ட்போன் மிகப்பெரிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அளவீடுகளில் இந்த மாடல் டேப்லெட் போன்ற உணர்வை கொடுக்கும். மடிக்கப்பட்ட நிலையில், இது வழக்கமான ஸ்மார்ட்போன் அளவிலேயே கிடைக்கும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் சியோமி நிறுவனம் தனது முதல் ப்ளிப் போன் மாடல்- சியோமி மிக்ஸ் ப்ளிப்-ஐ அறிமுகம் செய்த நிலையில், தற்போது மூன்றாகக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…