tech news
டிவியா தியேட்டரா? மாஸ் காட்டிய சியோமி
சியோமி நிறுவனம் தனது டிவி எஸ் மினி எல்இடி 75 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக இந்த டிவி ஐரோப்பா மற்றும் இதர நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன்பிறகு படிப்படியாக மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.
முற்றிலும் புதிய டிவி எஸ் மினி எல்இடி 75 டிவி மாடலில் மெட்டாலிக் ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ உள்ளது. இந்த டிவி QD மினி எல்இடி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது தேவையான வெளிச்சத்தை மட்டும் அனுமதிக்கும், இதனால் மேம்பட்ட கான்டிராஸ்ட் கிடைக்கும். இந்த டிவியின் அதிகபட்ச பிரைட்னஸ் 1200 நிட்ஸ் ஆகும்.
இதில் 4K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரிப்ரெஷ் ரேட், MEMC தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி ஸ்போர்ட்ஸ், திரைப்படங்கள் மற்றும் கேமிங் என பல்வித பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் பயனர்களுக்கு சிறப்பான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் டால்பி விஷன் ஐகியூ, டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.
கேமிங்கிற்காக இந்த டிவியில் கேம் பூஸ்ட் மோட், டூயல் HDMI 2.0 போர்ட்கள், ஃபிரீசின்க் பிரீமியம் சான்று, 4ms வரையிலான லோ லேடன்சி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி குவாட் கார்டெக்ஸ் A73 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 3GB ரேம், 32GB வரை மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் வைபை 6 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் டிவி ஓஎஸ் கொண்டுள்ள புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடலில் 10,000-க்கும் அதிக செயலிகள், தனிப்பட்ட முறையில் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு குரல் மூலம் டிவியில் நிகழ்ச்சிகளை தேடி பார்க்கலாம்.
இந்த டிவியில் ஏராளமான நேரலை சேனல்கள், செய்திகள், திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த டிவியுடன் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் முறையில் வழங்கப்படுகிறது.