tech news
லட்சத்துக்கு ஆயிரம் ரூபாய்… வங்கி கணக்கை வாடகைக்கு விடும் இளைஞர்கள்…
தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்து இருக்கும் இந்த காலத்தில் கூட ஆன்லைன் மோசடி கும்பலை கண்டறிவது பெரிய அளவில் காவல்துறைக்கு சிக்கலாகவே இருக்கிறது. விஞ்ஞானம் வளர வளர அவர்களும் தங்களுக்குள் இருக்கும் டெக்னிக்கை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு பெரிய பண மோசடி நடந்த வழக்கில் கோவா காவல்துறைக்கு அதிர்ச்சியான சம்பவம் காத்திருந்தது. முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் கிட்ட வங்கி கணக்கை சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரித்தது. அவர் கணக்கிலிருந்து பெரிய அளவில் பணம் பரிமாறப்பட்டிருந்ததை குறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார்.
ஆனால் அந்த பரிமாற்றத்திற்கு அவர் சொன்ன காரணம் தான் காவல்துறையே மிரள வைத்திருக்கிறது. வேலையில்லாமல் நிதி சிக்கலில் இருக்கும் இளைஞர்களுக்கு வலை வீசும் இத்தகைய கும்பல் அவர்களின் வங்கி கணக்கை சில நாட்களுக்கோ, மணி நேரங்களுக்கோ வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் விஷயம் வெளியாகி இருக்கிறது. அவர்கள் வங்கி கணக்கிற்கு மாறும் பணத்தில் லட்சத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகை வாங்கிக் கொள்கின்றனர்.
தற்போது இத்தகைய மோசடி அதிகரித்து வருகிறது. சாதாரண இளைஞரின் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மோசடி கும்பல் குறித்த மற்ற தகவல்கள் சைபர் கிரைம் காவல்துறையால் கண்டறிய முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. பொதுமக்கள் இத்தகைய விஷயங்களில் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தரப்பிலிருந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வாலிபர்!.. விருதுநகரில் அதிர்ச்சி…