Connect with us

latest news

ஆன்லைன் கேமிங்கில் தனி கவனம் செலுத்தும் யூடியூப் – லீக் ஆன புதிய தகவல்!

Published

on

Youtube-featured-img

ஆன்லைன் கேமிங் சேவையை வழங்குவதற்கான பணிகளில் யூடியூப் ஈடூபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் யூடியூப் கேமிங் சந்தையில் தனது கால்தடத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், யூடியூப் நிறுவனம் தனது ஊழியர்களிடம், ‘பிளேயபில்ஸ்’ என்ற பெயரில் புதிய சேவையை டெஸ்டிங் செய்ய வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சேவை கொண்டு பயனர்கள் யூடியூப் தளத்தில் இருந்தபடி ஆன்லைன் கேம்களை விளையாட முடியும். இது பற்றிய தகவலை தி வால் ஸ்டிரீட் ஜர்னல் முதலில் வெளியிட்டது. வெப் பிரவுசர் அல்லது செயலியில் யூடியூப் தளத்தில் உள்ள கேம்களை பயனர்கள் விளையாட முடியும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சேவையின் கீழ் ஏராளமான கேம்கள் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகின்றன.

Youtube

Youtube

சமீபத்தில் தான் யூடியூப் புதிதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் டப்பிங் சேவையை அறிவித்தது. இந்த சேவை கூகுள் ஏரியா 120 இன்குபேட்டர் உருவாக்கி இருக்கிறது. இதை கொண்டு கிரியேட்டர்கள் தங்களது வீடியோவினை பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து கொள்ள முடியும். இதுபற்றிய அறிவிப்பு விட்கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

வருடாந்திர அடிப்படையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிரியேட்டர்கள், ஆன்லைன் பிரான்டுகள், ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வர். ஏ.ஐ. என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய டப்பிங் சேவை ‘Aloud’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் டிரான்ஸ்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் கொண்டு வீடியோ டிரான்ஸ்க்ரிப்ஷன்களை உருவாக்கும்.

Online-Gaming-

Online-Gaming-

புதிய சேவை கொண்டு பயனர்கள் பல மொழிகளில் தங்களது வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது யூடியூபின் புதிய ‘பிளேயபில்ஸ்’ மற்றும் ஏ.ஐ. சார்ந்த டப்பிங் சேவைகள் பயனர்கள், கிரியேட்டர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முன்னதாக கூகுள் நிறுவனத்தின் யூடியூப் ஆகஸ்ட் 21, 2023 முதல் யூடியூபில் ஃபேன் சேனல்களை வைத்திருப்பவர்கள் தங்களது சேனல் பெயர் அல்லது ஹேன்டிலில் அவர்களது தரவுகள் ஒரிஜினல் கிரியேட்டர், கலைஞர் அல்லது பிரான்டை சார்ந்தது இல்லை என்று குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது.

google news