Categories: Uncategorized

நாங்க என்ன பங்களாதேஷா?…எங்க ஆட்டம் வேற லெவல்… இந்திய அணிக்கு பல்பு கொடுத்த நியூஸிலாந்து…

டிம் லாத்தம் தலைமையிலான நியூஸிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இந்தியாவில் தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. வங்கதேச அணியுடனான டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை வொயிட் வாஷ் செய்த வெற்றிக களைப்பில் இருந்து வருகிறது இந்திய அணி.

பங்களாதேஷுடனான தொடர்கள் ஆரம்பிக்கும் போதே இந்த சீரியஸ் இந்தியாவிற்கு டஃப் கொடுக்காது என ஃபேன்ஸ் அதிகமாக எதிர்பார்த்தனர். அதே போல தான் மேட்சின் ரிஸல்டுகளும் அமைந்தது.

பங்களாதேஷை கதற வைத்து அவர்களது நாட்டிற்கு  தோல்வியை பரிசாக வழங்கி அனுப்பி வைத்தது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் அடுத்த தொடர் முற்றிலும் மாறுபட்டு தான் இருக்கும், வெற்றி என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது என்ற எண்ணம் உருவாகக் காரணம் இந்திய இப்போது  எதிர்கொண்டு வருவது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் நியூஸிலாந்து அணி என்பதால்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை இரு அணிகளின் கேப்டன்களும் டாஸ் போட மைதானத்திற்கு வந்தனர். டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஜெய்ஷ்வால், ரோஹித் சர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இரண்டு ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா தனது விக்கெட்டினை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி ரோஹித்திற்கு கம்பெனி கொடுக்க சென்று விட்டார் விராத் கோலி.

ரிஷப் பண்ட் இருபது ரன் களையும், ஜெய்ஷ்வால் பதிமூன்று ரன்களையும் எடுத்து அவுட் ஆக, மற்ற வீரர்கள் எல்லாம் மைதானத்திற்கும் பெவிலியனுக்கும் மார்ஸ்ஃபாஸ்ட் நடத்தினர்.

Rohit Gambhir

முப்பத்தி ஓன்று புள்ளி இரண்டு ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி யாரும் எதிர்பார்த்திராத விதமாக நாற்பத்தி ஆறு ரன்களை மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடி வருகிறது நியூஸிலாந்து.

பத்து ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி முப்பத்தி ஆறு ரன்களை குவித்துள்ளது. நியூஸிலாந்து அணியின் மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளையும், வில்லியம் ஓரோர்கே நான்கு விக்கெட்டுகளையும் குவித்து இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக மாறினர். டிம் சவுதி ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்,

இன்னும் மூன்றரை நாட்கள் ஆட்டம் நடக்க வேண்டிய நிலை இருப்பதால், முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்திடம் மிகக் குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் ஆகி பல்பு வாங்கியது இந்திய ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸ் பவுலிங் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் எழுச்சி பெற்று போட்டியை வென்று இந்த தொடரில் இந்திய அணி முன்னிலை பெறும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.

sankar sundar

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

52 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

1 hour ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

2 hours ago