tech news
50எம்பி கேமரா, அட்டகாசமான சிப்செட்..ஒன்பிளஸ்-ன் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்..! எப்போ அறிமுகம் தெரியுமா..?
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்பதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 உடன் கூடிய கலர் ஓஎஸ் உள்ளது.
டிஸ்பிளே:
ஏஸ் 2 ப்ரோ ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 1.5K வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா:
இதில் 50எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமராவைக் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபிக்காக 16எம்பி ஷூட்டர் உள்ளது.
பேட்டரி:
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இதனை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் சீக்கிரமாக மொபைலை சார்ஜ் செய்ய முடியும். இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
ஸ்டோரேஜ்:
ஏஸ் 2 ப்ரோ 24 ஜிபி LPDDR5X ரேம்-ஐக் கொண்டிருக்கலாம். மேலும் இது 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் என மூன்று விருப்பங்களிலும் கிடைக்கும். 256ஜிபி வரை இண்டெர்னெல் ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டுள்ளது. இதனை 1டிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.