Categories: job newsUncategorized

டிகிரி முடித்திருந்தால் போதும்..! உங்களுக்காகவே மாதம் ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (CIPET) நிறுவனம் கல்வி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் பாலிமர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதன்மையான தேசிய நிறுவனமாகும்.

இந்நிறுவனம் காலியாக உள்ளப் பணியிடங்களை அடிப்படையில் நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

CIPET நிறுவனத்தில் உதவி பேராசிரியர் (Assistant Professor), விரிவுரையாளர் (Lecturer) மற்றும் உதவி வேலை வாய்ப்பு ஆலோசகர் (Assistant Placement Consultant) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தமாக 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CIPET

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 65-க்கு கீழ் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு Notification-ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

உதவி பேராசிரியர்:

இந்தியப் பல்கலைக் கழகங்களில் நல்ல கல்விப் பதிவோடு முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் யுஜிசி, சிஎஸ்ஐஆர் அல்லது யுஜிசி அங்கீகாரம் பெற்ற அதேபோன்ற தேர்வில் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விரிவுரையாளர்:

முழு நேர முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான முழுநேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாலிடெக்னிக் / இன்ஜினியரிங் கல்லூரியில் குறைந்தபட்சம் 1 வருட ஆசிரியர் அனுபவம் இருக்க வேண்டும்.

உதவி வேலை வாய்ப்பு ஆலோசகர்:

சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவத்துடன் முழுநேர பட்டதாரியாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.cipet.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, அங்கு உள்ள Application Form விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் நிரப்பி, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரரி அஞ்சல் உறையின் மேல் “விளம்பர எண்: CIPET/MYS/ADMIN/CIPET_Contr./02” மற்றும் “விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்” ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்
  • அனுப்ப வேண்டிய முகவரி : The Director & Head, CIPET: CSTS – Mysuru, No.437/A, Hebbal Industrial Area, Mysuru – 570 016

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அறிவிப்பு : Notification 

அத்தியாவசிய தகுதி: Qualification

பொதுவான வழிமுறைகள்: Instructions

விண்ணப்ப படிவம் : Application Form

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago