latest news
டெலிகிராமில் போலியான செய்தியின் மூலம் 25 லட்சத்தை இழந்த நபர்..இனிமேலாவது கவனமாக இருங்க மக்களே..
இந்தியாவில் கடந்த சில மாதங்களில் பல வகைகளில் மக்களை ஏமாற்றும் கும்பல்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் இருந்து பணத்தினை பறிப்பதே இவர்கள் நோக்கமாக வைத்துள்ளனர். எனவே ரிசைவ் வங்கியின் அறிவுரையின்படி நமது சொந்த தகவல்களை தெரியாதவர்களிடம் கூறாமல் இருப்பதே சிறந்தது. இப்படியான ஏமாற்றும் கும்பல்கள் நமது மொபைல் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலைவாய்ப்பு தருவதாகவும் மக்களிடம் பணத்தினை பறிக்கின்றனர். எனவே நாம் தெளிவாக இருப்பதே இதற்கு ஒரே தீர்வாக அமையும்.
சமீபத்தில் ஹரியானா மாநில குருகிராம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பிரபல டெலிகிராம் செயலியின் மூலம் கிட்டதட்ட 25 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இந்த செய்தியை பிரபல செய்தி நிறுவனமான — தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி சுப்ரடா கோஷ் என்ற நபர் தனது டெலிகிராம் செயலியில் தனக்கு வீட்டிலிருந்தே பகுதி நேர வேலைவாய்ப்பு தருவதாக செய்தி ஒன்று வந்ததாக கூறுகிறார். இவருக்கு அந்த வேலைவாய்ப்பில் விருப்பம் இருந்ததாகவும் மேலும் அந்த போலியான நபரிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த போலி நபர் ஒரு லிங்கை கொடுப்பதாகவும் அதனுள் சென்று 5ஸ்டார் ரேட்டிங் கொடுக்கும்படியாகவும் கூறியுள்ளார். சுப்ரடா கோஷும் அவ்வாறு செய்துள்ளார்.
மேலும் தினமும் அவருக்கு ஒரு டாஸ்க் கொடுப்பதாகவும் அதனை சரியாக செய்து முடித்தால் சுப்ரடாக்கு கமிஷன் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தொடக்கத்தில் ரூ.10000ஐ முதலீடு செய்ய சொல்லியும் கூறியுள்ளார். ஆரம்பத்தில் கோஷுக்கு லாபம் வந்துள்ளதாகவும் பின் மேலும் சில தொகையை முதலீடு செய்யவும் கூறியுள்ளார். அதன்படி கிட்டதட்ட 25 லட்சம் வரை செலுத்தியுள்ளார். ஒரு வேளை கோஷ் தனது தினசரி டாஸ்கை முடிக்கவில்லையான அவரது கணக்கினை முடக்கிவிடுவோம் எனவும் அந்த போலி நபர் கூறியுள்ளார். பின் தனது கணக்கில் இருந்து பணத்தினை எடுக்க முடியாமல் ஆகியுள்ளது. பின் இதனை பற்றி போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
எனவே இவ்வாறு பல மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.