Uncategorized
விமானப் போக்குவரத்துத் துறையில் சேர அரிய வாய்ப்பு..! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
பவன் ஹான்ஸ் லிமிடெட் (Pawan Hans Limited) ஒரு முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் மற்றும் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமாகும். தற்பொழுது, பவன் ஹான்ஸ் நிறுவனம் காலியாக உள்ள பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Official Notification-ல் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
பவன் ஹான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள விமானப் பராமரிப்புப் பொறியாளர் (Aircraft Maintenance Engineer) பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பதவிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பதாரரின் வயது மற்றும் தகுதி:
விமானப் பராமரிப்புப் பொறியாளர் பதவிக்கு மேற்கண்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் இணையதளமான www.pawanhans.co.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.
பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது வயது, சாதி/வகுப்பு, தகுதி, அனுபவம், ஊதியம்/CTC, உரிமம்/மருத்துவ நிலை போன்றவற்றிற்கான சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றுகளின் நகல்களுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இறுதி சமர்ப்பிப்புக்கு முன் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Application Form –ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
விமானப் பராமரிப்புப் பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பொது/ ஓபிசி பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 295 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு முறை செலுத்திய பதிவுக் கட்டணம் எந்தச் சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்பட மாட்டாது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
விமானப் பராமரிப்புப் பொறியாளர் பதவிக்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 10 வரை உள்ளது. எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இது குறித்த தகவல்களுக்கு Official Notification என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
சம்பள விவரம்:
விமானப் பராமரிப்புப் பொறியாளர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். இந்த பதவிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.