Connect with us

job news

அக்கௌன்ட் ஆபிஸர் பணியில் சேர விருப்பமா..? இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!

Published

on

Indian Institute of Foreign Trade

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரீன் டிரேட் (Indian Institute of Foreign Trade) என்பது இந்தியாவில் 1963 இல் நிறுவப்பட்ட ஒரு வணிகப் பள்ளியாகும். இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. இது சிவில் சர்வீசஸ் பயிற்சி நிறுவனமாகவும் செயல்படுகிறது.

தற்பொழுது, இந்த நிறுவனம், குஜராத்தின் காந்திநகரில் உள்ள தனது GIFT நகர வளாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மத்திய/மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அனுபவம் வாய்ந்த மற்றும் ஓய்வு பெற்ற ஒருவரை எதிர்பார்க்கிறது.

காலிப்பணியிடங்கள்:

GIFT நகர வளாகத்தில் கணக்கு அதிகாரியாக (Account Officer) ஒருவரை நியமிக்க உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வயது:

கணக்கு அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • வணிகத்தில் பட்டப்படிப்பு அல்லது எஸ்ஏஎஸ் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அனுபவம் மற்றும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.iift.ac.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் Application Form ஆன்லைன் விண்ணப்பப்படிவத்திற்கான லிங்கை கிளிக் செய்து, அதிலிருக்கும் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவு செய்வதற்கு முன் கவனமாக படிக்கச் வேண்டும்.
  • பிறகு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முறை:

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்காணல் முகவரி: 

IIFT Campus at B-21,

Qutab Institutional Area,

New Delhi-110016.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

கணக்கு அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 16ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *