Categories: job newsUncategorized

பட்டதாரிகளே கவனம்..! மாதம் ரூ.1.16 லட்சம் சம்பளத்துடன் ரிசர்வ் வங்கியில் வேலை..! இன்றே விண்ணப்பியுங்கள்..

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை என்பது தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு அர்ப்பணிப்பு ஆகும். அங்கு நீங்கள் எடுக்கும் முடிவுகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதித்துறையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்பொழுது, இந்திய ரிசர்வ் வங்கியானது முதுகலை கிரேடு பி பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை வரவேற்கிறது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பிக்கவும். நீங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் மேலும் தகவலுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ அறிவிப்பை RBI Grade B 2023 Details என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம்  பார்த்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் வயது & தகுதி:  

இந்த வேலையில் சேர விண்ணப்பிப்பவரின் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டியது அவசியம். இதன்பின், உதவியாளர் அல்லது உதவிப் பணியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறை அதிகாரி பணிக்கு குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பொருளாதாரம் / பொருளாதார அளவியல் / அளவு பொருளாதாரம் / கணித பொருளாதாரம் / ஒருங்கிணைந்த பொருளாதார பாடநெறி / நிதி ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறை அதிகாரி பணிக்கு புள்ளியியல்/ கணிதப் புள்ளியியல்/ கணிதப் பொருளாதாரம்/ பொருளாதார அளவியல்/ புள்ளியியல் & தகவல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி வசதி:

விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதில், கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்களைச் செலுத்துவதில் அல்லது சேர்க்கை கடிதத்தைப் பதிவிறக்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், Help and Support Center என்ற இணைப்பின் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : 

ஆர்வமுள்ள மற்றும் குறிப்பிட்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான Online Application மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வேறு எந்த முறையும் ஆர்.பி.ஐ குறிப்பிடவில்லை.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணமானது பொது மற்றும் ஒபிசி(OBC), இடபிள்யூஎஸ் (EWS) பிரிவினருக்கு ரூ.850ஆகவும்,எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 ஆகவும் உள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

கடைசி தேதி மற்றும் தேர்வுமுறை:

இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய தேதி மே 9 அன்று தொடங்கி,  ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 9 வரை உள்ளது. மேற்கூறிய பணிகளுக்கான தேர்வு ஆன்லைன் / எழுத்து முறை மூலம் முதல் கட்டத் தேர்வு ஜூலை மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலும் நடைபெறும். அதன்பின் நேர்காணல் நடைபெறும்.

காலிப்பணியிடங்கள்:

ஆர்பிஐயில் உள்ள 291 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதில் உதவியாளர் அல்லது உதவிப் பணியாளர் பணிக்கு 222 பணியிடங்களும், பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறை அதிகாரி பணிக்கு 38 பணியிடங்களும், புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறை அதிகாரி பணிக்கு 31 பணியிடங்களும் பிரிவு வாரியாக உள்ளன.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியத்தொகையாக  ரூ.55,200 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அவ்வப்போது சிறப்புக் கொடுப்பனவு, கிரேடு அலவன்ஸ், அகவிலைப்படி, ஸ்பெஷல் கிரேடு அலவன்ஸ், கற்றல் கொடுப்பனவு, வீட்டு வாடகைக் கொடுப்பனவு ஆகியவை வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களை அறிய RBI Grade B 2023 Details என்பதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago