Uncategorized
குற்றால சீசன் இன்னைக்கு பெஸ்டு…ஆனா அங்க போறாது வேஸ்டு எதனாலாயாம்?…
குற்றாலம் ஏழை முதல் பணக்காரர்கள் வரை சீசன் நேரத்தில் தன்னை தேடி வருவபவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் சமமான ஆனந்தத்தை அள்ளித் தரும் சுற்றுலாத் தளம். மே மாத இறுதி வந்து விட்டாலே எல்லோரது கவனத்தையும் தன் மீது இழுக்கத்துவங்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாததளம்.
தமிழ் மாதங்களான வைகாசி மாத இறுதியில் இங்கு சீசனுக்கான அறிகுறிகள் தென்பட்டு ஆனி, ஆடி மாதங்களில் உச்சம் பெற்று அதன் பின்னர் ஆவணி மாதத்தில் மாறுபட்டு காட்சியளிக்கும். ஆனாலும் உச்சகட்ட நேரத்திலும் கூட ஒரு சில நாட்கள் தனது இயல்பை விட்டு மாறியயே அமையவும் செய்யும். ஒரு சில நாட்கள் வெயிலின் கோர தாண்டவத்தால் வறட்சியும், அதே நேரத்தில் வெள்ளப்பெருக்கினால் குளிக்க தடை என இருந்தும் வந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே குற்றாலத்தின் குளுமையானது கூடிய வண்ணமே காட்சியளிக்கிறது. அளவு கடந்த ஆடி மாத காற்று, சிலு சிலு சாரல், அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் என ரம்மியமன நிலை தான் இருந்தது. நேற்றும் இதே நிலை தான் அங்கு நீடித்தது.
ஆனால் காலை திடீரென அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை விதிக்கும் படி அமைந்தது, நேற்று விடுமுறை தினம் என்பதால் குடும்ப சகீதமாக வந்தவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. நேற்று காலை குளிக்க விடுக்கப்பட்டிருந்த தடையானது இன்று காலை பத்து முப்பது மணி நிலவரப்படி அதே நிலையில் தான் இருந்தது. குளுமையான காற்று, கருமேகங்களால சூழப்பட்ட வானம், திடீர் சாரல் என தட்பவெட்ப நிலை ஏதுவாக இருந்து குற்றாலம் இன்றைக்கு பெஸ்டாக காட்சியளித்தாலும், தடை காரணமாக இன்று காலை பத்து மணி நிலவரத்தின் படி அங்கே செல்வது வேஸ்டாகவே பார்க்கப்படுகிறது